பௌது

imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 15:59, 29 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பௌது (Boudh), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் நடுப்பகுதியில் அமைந்த பௌது மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். மகாநதி ஆற்றின் கரையில் அமைந்த பௌது நகரம், மாநிலத் தலைநகரான புவனேசுவரத்திற்கு வடமேற்கே 224.3 கிகிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் 31 டிசம்பர் 1947 முடிய பௌது சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கியது.[1]

பௌது

நகரம்
பௌது is located in ஒடிசா
பௌது
பௌது
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பௌது நகரத்தின் அமைவிடம்
பௌது is located in இந்தியா
பௌது
பௌது
பௌது (இந்தியா)
ஆள்கூறுகள்: 20°50′N 84°19′E / 20.84°N 84.32°E / 20.84; 84.32
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்பௌது மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்20,424
மொழிகள்
 • அலுவல் மொழிஒடியா மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
762014
வாகனப் பதிவுOD-27
இணையதளம்https://boudh.odisha.gov.in/

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 17 வார்டுகளும், 4,559 குடியிருப்புகளும் கொண்ட பௌது நகரத்தின் மக்கள் தொகை 20,424 ஆகும். அதில் 10,492 ஆண்கள் மற்றும் 9,932 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.33 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.80 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 26.91 % மற்றும் 2.43 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 97.51%, இசுலாமியர் 2.13%, கிறித்தவர்கள் 0.27%,மற்றும் பிற சமயத்தினர் 0.08% வீதம் உள்ளனர்.[2]

தொடருந்து நிலையம்

பௌத் மற்றும் ஜர்முண்டா இடையே புதிதாக இருப்புப்பாதை மற்றும் 3 நடைமேடைகள் கொண்ட தொடருந்து நிலையம் அமைக்கும் பணி நவம்பர் 2024ல் முடிவுற்றது.[3][4][5]2025ஆம் ஆண்டிலிருந்து பௌது தொடருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பௌது&oldid=454424" இலிருந்து மீள்விக்கப்பட்டது