மங்கொம்பு - 7

imported>Anbumunusamy பயனரால் செய்யப்பட்ட 15:58, 31 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மங்கொம்பு - 7 (MO 7 - Karthika) எனப்படும் இந்த நெல் வகை, திரிவேணி மற்றும் ஐஆர் 15399 ஆகிய நெல் இரகங்களை ஒத்திசைந்த அமைப்பு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட,[1] தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் ஒரு கலப்பின நெல் வகையாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, கார்த்திகா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]

மங்கொம்பு - 7
MO 7 - Karthika
வேளாண் பெயர்
கார்த்திகா (Karthika)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
திரிவேணி X ஐஆர் 15399
வகை
புதிய நெல் வகை
காலம்
105 - 110 நாட்கள்
வெளியீடு
1987
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

பின்னணி

கேரளத்தின், ஆலப்புழா மாவட்டம், குட்டநாடு பகுதிக்கு ஏற்ற நெல் இரகமாக உள்ள இது, இலை உறை கருகல், இலை உறை அழுகல் மற்றும் பழுப்பு நிறத் தத்துப்பூச்சி (BPH) க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.[2] மேலும் குறுகிய கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 105 – 110 நாட்களில் முதிர்வடைவதாகவும், நீளமான மற்றும் தடித்த, இந்நெல் இரகத்தின் அரிசி, சிவப்பு நிறமாகும்.[3]

சான்றுகள்

  1. 1.0 1.1 "MO 7-Karthika". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-08-27.
  2. "Karthika (MO 7) Medium duration varieties Season : Virippu (I crop / autumn), Mundakan (II crop / winter), Puncha (III crop / summer)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2025. Retrieved 2025-08-27.
  3. "MO 7-Karthika". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 20259. Retrieved 2025-08-27.
"https://tamilar.wiki/w/index.php?title=மங்கொம்பு_-_7&oldid=456458" இலிருந்து மீள்விக்கப்பட்டது