முதலமட
முதலமட (Muthalamada) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராம ஊராட்சி ஆகும். இது ஒரு உள்ளாட்சி அமைப்பாகும், இதில் முதலமட-I மற்றும் முதலமட-II ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன.[2] மாம்பழம் அதிகம் விளையும் பகுதிகளில் முதலாமடை ஊராட்சியும் ஒன்றாகும். இங்கு நிலவும் காலநிலையும், மண் வளமும் மாம்பழ விளைச்சலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. இங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வட மாநிலங்களுக்கு மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முதலமட | |
|---|---|
சிற்றூர் | |
முதலமட தொடருந்து நிலையம் | |
| ஆள்கூறுகள்: 10°38′09″N 76°47′55″E / 10.6358°N 76.7987°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | பாலக்காடு |
| அரசு | |
| • நிர்வாகம் | முதலமட கிராம ஊராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 66.76 km2 (25.78 sq mi) |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 37,060 |
| • அடர்த்தி | 560/km2 (1,400/sq mi) |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | KL-70 |
அருகிலுள்ள தொடருந்து நிலையம் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சந்திப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள முதலமட தொடருந்து நிலையம் ஆகும். பரம்பிக்குளம் காட்டுயிர் உய்விடம் இந்த ஊராட்சியில் உள்ளது. அது கன்னிமாரா தேக்கு மரம் மற்றும் வனவிலங்குகளை பார்வையிடுவதற்கு பிரபலமானது.
படக்காட்சியகம்
-
பாரா, எல்லப்பள்ளி
-
முதலமட
மேற்கோள்கள்
- ↑ "List of Panchayats in Palakkad district".
- ↑ "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 2 January 2014. Retrieved 1 January 2014.
