முத்துகன்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 16:18, 23 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: இவரது மகன் → இவரின் மகன் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

முத்துகன் என்பவர் சகதை கானின் மூத்த மகனாவார். அவர் வழியாக மங்கோலியப் பேரரசை நிறுவிய ககான் செங்கிஸ் கானின் பேரன் ஆவார். 1221ஆம் ஆண்டு பாமியான் முற்றுகையின் போது முத்துகன் கொல்லப்பட்டார். இவரின் மகன் எசுந்தோவா. எசுந்தோவா சகதை கானரசின் கானாகிய பரக்கின் தந்தையாவார். 1266-1271 ஆகிய காலகட்டத்தில் மொகுலிசுதானின் கானாகப் பரக் பதவி வகித்தார்.[1][2]

முத்துகன்
இறப்புபாமியான்
குழந்தைகளின்
பெயர்கள்
எசுந்தோவா
காரா ஹுலேகு
புரி
மரபுபோர்சிசின்
தந்தைசகதை கான்

சகதை கானரசின் பரம்பரை

பாபர் தான் எழுதிய பாபர் நாமாவின் 19 வது பக்கத்தில் முதல் அத்தியாயத்தில் தனது தாய் வழி தாத்தா யூனஸ் கானின் பரம்பரையைப் பின்வருமாறு விளக்குகிறார்:

"யூனஸ் கான் சகதை கானின் வழித்தோன்றல், சகதை கான் செங்கிஸ் கானின் இரண்டாவது மகன் (பின்வருமாறு,) யூனஸ் கான், வயிஸ் கானின் மகன், வயிஸ் கான் ஷெர்-அலி அவுக்லோனின் மகன், ஷெர்-அலி அவுக்லோன் முகம்மத் கானின் மகன், முகம்மத் கான் கிசிர் கவாஜா கானின் மகன், கிசிர் கவாஜா கான் துக்லுக்-திமுர் கானின் மகன், துக்லுக்-திமுர் கான் ஐசன்-புகா கானின் மகன், ஐசன்-புகா கான் தவா கானின் மகன், தவா கான் பரக் கானின் மகன், பரக் கான் எசுந்தவா கானின் மகன், எசுந்தவா கான் முவத்துகனின் மகன், முவத்துகன் சகதை கானின் மகன், சகதை கான் செங்கிஸ் கானின் மகன்"[1]

மிர்சா முகம்மத் ஐதர் துக்லத்தின் கூற்றுப்படி அப்துல் கரிம் கானின் பரம்பரை
  1. செங்கிஸ் கான்
  2. சகதை கான்
  3. முத்துகன்
  4. எசுந்தோவா
  5. கியாசுத்தீன் பரக்
  6. துவா
  7. முதலாம் எசன் புகா
  1. துக்லுக் தைமுர்
  2. கிசிர் கோசா
  3. முகம்மத் கான் (மொகுலிசுதானின் கான்)
  4. ஷிர் அலி ஓகலன்
  5. உவைசு கான் (வைசே கான்)
  6. யூனுஸ் கான்
  7. அகமத் அலக்
  1. சுல்தான் சயித் கான்
  2. அப்துரஷித் கான்
  3. அப்துல் கரிம் கான் (எர்கந்து)

[2]

உசாத்துணை

  1. 1.0 1.1 The Babur Nama in English, Zahiru'd-din Mubammad Babur Padshah Ghdzt, Annette Susannah Beveridge
  2. 2.0 2.1 The Tarikh-i-Rashidi: a history of the Moghuls of central Asia by Mirza Muhammad Haidar Dughlat; Editor: N. Elias,Translated by Sir Edward Denison Ross,Publisher:S. Low, Marston and co., 1895
"https://tamilar.wiki/w/index.php?title=முத்துகன்&oldid=471491" இலிருந்து மீள்விக்கப்பட்டது