ஆள்கூறுகள்: 33°54′15″N 73°23′25″E / 33.90417°N 73.39028°E / 33.90417; 73.39028

முர்ரே

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 16:43, 9 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேலும் படிக்க)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
முர்ரே

مری

மலைவாழிட நகரம்
அடைபெயர்(கள்): மலைகளின் ராணி, வெள்ளை நகரம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முர்ரே மலைவாழிடத்தின் அமைவிடம்
முர்ரே (பாக்கித்தான்)
ஆள்கூறுகள்: 33°54′15″N 73°23′25″E / 33.90417°N 73.39028°E / 33.90417; 73.39028
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
மாவட்டம்இராவல்பிண்டி
தாலுகாமுர்ரே தாலுகா
ஏற்றம்
2,291.2 m (7,517.1 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்25,816
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
ஒன்றியக் குழு8

முர்ரே (Murree), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இராவல்பிண்டி மாவட்டத்தின், முர்ரே தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடமும், மலைவாழிட நகரமும் ஆகும். பிர்பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்த முர்ரே நகரம் இராவல்பிண்டிக்கு வடகிழக்கே 72.1 கிலோமீட்டர் தொலைவிலும்; இஸ்லாமாபாத்திற்கு வடகிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, முர்ரே நகரத்தின் மொத்த மக்கள் தொகை 25,816 ஆகும். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 2291 மீட்டர் உயரத்தில், பிர்பாஞ்சல் மலைத்தொடரில் உள்ளது. இந்நகரத்தை பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் 1853-ஆம் ஆண்டு முதல் மலைவாழிடமாக கொண்டனர். பஞ்சாப் ஆளுநரின் மலைவாழிட அலுவலக முகாமாகவும், வாழிடமாகவும் 1876-ஆம் ஆண்டு முடிய இருந்தது. பின்னர் சிம்லாவிற்கு மாற்றப்பட்டது. [2][3][4][3]

19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் முர்ரே காலனித்துவ துருப்புகளுக்கான முகாமாகவும், மருத்துவ தளமாகவும் செயல்பட்டது. மேலும் பிரித்தானிய மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் முர்ரே ஒரு மலைவாழிட நகரமாக இருந்தது. [5] [6]முர்ரே நகரத்தில் ஆங்கிலேயர்களுக்காக நடத்தப்பட்ட லாரன்ஸ் கல்லூரி மற்றும் வணிக வளாகம் செயல்பட்டது. தற்போது முர்ரே குளிர்கால சுற்றுலா மலைநகரமாக உள்ளது.

பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு முர்ரே நகரம் பாகிஸ்தான் மக்களின் மலைவாழிட நகரமாக விளங்குகிறது.[7]முர்ரே நகரம் ஆசாத் காஷ்மீர் மற்றும் அப்போட்டாபாத் பகுதிகளுக்கு செல்பவர்களின் முக்கிய வழித்தடமாக உள்ளது.[8][9]

இயேசு கிறிஸ்து முர்ரே பகுதிக்கு வருகை புரிந்தார் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை ஆகும். [10]இயேசு சிலுவையில் மரித்த பின்னர், மேரி மாதா தனது இறுதிககாலத்தை முர்ரே பகுதியில் கழித்தார் என்பதும் உள்ளூர் மக்களின் நம்பிக்கை ஆகும்.[11]

இராணுவக் கேந்திரம்

முர்ரே நகர்புறத்தில் முர்ரே மலை இராணுவப் பாசறை மற்றும் முர்ரே காலாபாக் இராணுவப் பாசறைகள் உள்ளது.[12] தரைப்படையின் 12வது டிவிசன் மற்றும் பல இராணுவப் பயிற்சி நிலையங்கள் & ஒருங்கிணைந்த இராணுவ மருத்துவ மனை முர்ரே நகரத்தில் செயல்படுகிறது. பாகிஸ்தான் வான்படையின் தளம் ஒன்று முர்ரே நகரம் அருகே இயங்குகிறது.

2022 கடும் பனிப்பொழிகள்

8 சனவரி 2022 அன்று முர்ரே பகுதியில் கடும் பனிப்பொழிவினால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.[13][14]

படக்காட்சியகம்

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், முர்ரே
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 17.2
(63)
19.8
(67.6)
23.0
(73.4)
26.0
(78.8)
32.0
(89.6)
32.2
(90)
31.7
(89.1)
27.2
(81)
25.6
(78.1)
25.0
(77)
22.3
(72.1)
21.1
(70)
32.2
(90)
உயர் சராசரி °C (°F) 7.2
(45)
7.5
(45.5)
11.6
(52.9)
17.2
(63)
21.7
(71.1)
25.1
(77.2)
22.4
(72.3)
21.4
(70.5)
20.9
(69.6)
18.6
(65.5)
14.5
(58.1)
10.2
(50.4)
16.53
(61.75)
தினசரி சராசரி °C (°F) 3.7
(38.7)
4.0
(39.2)
8.0
(46.4)
13.2
(55.8)
17.3
(63.1)
20.6
(69.1)
19.1
(66.4)
18.4
(65.1)
17.2
(63)
14.3
(57.7)
10.3
(50.5)
6.3
(43.3)
12.7
(54.86)
தாழ் சராசரி °C (°F) 0.1
(32.2)
0.5
(32.9)
4.3
(39.7)
9.1
(48.4)
12.8
(55)
16.1
(61)
15.7
(60.3)
15.4
(59.7)
13.4
(56.1)
10.1
(50.2)
6.2
(43.2)
2.4
(36.3)
8.84
(47.92)
பதியப்பட்ட தாழ் °C (°F) −8.4
(16.9)
-10.6
(12.9)
−7.0
(19)
-3.3
(26.1)
0.6
(33.1)
3.6
(38.5)
8.9
(48)
10.0
(50)
6.0
(42.8)
1.1
(34)
-3.3
(26.1)
−10.5
(13.1)
−10.6
(12.9)
பொழிவு mm (inches) 126.5
(4.98)
145.0
(5.709)
176.8
(6.961)
133.0
(5.236)
91.9
(3.618)
142.0
(5.591)
418.3
(16.469)
336.3
(13.24)
161.5
(6.358)
70.2
(2.764)
32.5
(1.28)
70.3
(2.768)
1,904.3
(74.972)
ஆதாரம்: NOAA (1961–1990)[15]

அடிக்குறிப்புகள்

  1. "Punjāb (Pakistan): Province, Major Cities, Municipalites & Towns - Population Statistics, Maps, Charts, Weather and Web Information". www.citypopulation.de.
  2. "A British town in the hills: Book on Murree launched" (in en-US). The Express Tribune (newspaper). 2013-11-12. https://tribune.com.pk/story/630567/a-british-town-in-the-hills-book-on-murree-launched/. 
  3. 3.0 3.1 Murree Hills Cantonment GlobalSecurity.org website, Retrieved 16 October 2021
  4. Chisholm (1911).
  5. "Murree Culture | Murree History". www.world66.com. Archived from the original on 2016-10-29. Retrieved 2016-10-29.
  6. "Kelley [née Beadon, Joanna Elizabeth (1910–2003), prison administrator]". Oxford Dictionary of National Biography (online). (2004). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/89897.  (Subscription or UK public library membership required.)
  7. "Rain, tourists cause traffic jams in Murree". Dawn (newspaper). 2016-07-10. https://www.dawn.com/news/1269846. 
  8. "Independence Day: Festivity plans finalised for Murree" (in en-US). The Express Tribune (newspaper). 2014-08-04. https://tribune.com.pk/story/743914/independence-day-festivity-plans-finalised-for-murree/. 
  9. Asghar, Mohammad (2015-08-14). "Pakistanis not free to go to Murree on Independence Day". Dawn (newspaper). https://www.dawn.com/news/1200394. 
  10. Jesus In India: How the film came to be
  11. Mai Mari da Ashtan
  12. "Cantonment Boards". mlc.gov.pk. Military Lands and Cantonments Department – Ministry of Defence, Government of Pakistan. Retrieved 6 May 2025.
  13. முர்ரேயில் கடும் பனிப்பொழிவு: இதுவரை 21 பேர் உயிரிழப்பு
  14. முர்ரியில் கடும் பனிப்பொழிவு காரணமாக 22 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  15. "Murree Climate Normals 1961–1990". National Oceanic and Atmospheric Administration. Retrieved 16 October 2021.

மேற்கோள்கள்

Attribution:

மேலும் படிக்க

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=முர்ரே&oldid=472457" இலிருந்து மீள்விக்கப்பட்டது