மேகவாகனன்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 16:45, 19 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (சொந்த வாழ்க்கை: clean up, replaced: இவரது மனைவி → இவரின் மனைவி using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மேகவாகனன் (Meghavahana) காஷ்மீரின் இரண்டாவது கோனாண்டா வம்சத்தின் ஆட்சியாளரும் நிறுவனரும் ஆவார்.[2] இவர் கோனாண்டா ஆட்சியாளர்களின் 80-வது ஆட்சியாளர் ஆவார். இவரைத் தொடர்ந்து பிரவரசேனன் என்பவர் 81 வது ஆட்சியாளராக பதவிக்கு வந்தார்.

படிமம்:Coin of Meghama(...). Circa 7th century CE, Kashmir.jpg
மேகவாகனனின் சாத்தியமான நாணயம். முன்பக்கம் : சிவன் பசுபதி ("மிருகங்களின் இறைவன்"), வலது கையில் முத்திரைக் காட்டி, திரிசூலத்தை வைத்திருக்கிறார்; பின்னால் ஒரு சிங்கம் அல்லது புலி உருவம். மற்றொரு பக்கம் : இரு கைகளிலும் தாமரையை ஏந்தியவாறு தாமரையின் மேல் அமர்ந்துள்ள தேவி, இடதுபுறம் கிடார அரச சின்னம், வலப்புறம் பிராமியில் 'ஜெய என்ற எழுத்து. சுமார் பொ.ச.7 ஆம் நூற்றாண்டு.[1]

சொந்த வாழ்க்கை

மீட்டெடுக்கப்பட்ட வம்சத்தின் முதல் இளவரசரான மேகவாகனன், காந்தார மன்னனின் அவையில் நாடுகடத்தப்பட்ட யுதிஷ்டிரனின் கொள்ளுப் பேரனான கோபாதித்யாவின் மகன் என்று கூறப்படுகிறது. காஷ்மீர் மந்திரிகளின் அழைப்பின் பேரில் தனது முன்னோர்களின் சிம்மாசனத்தைக் கைப்பற்கனன், வலிமையானவராகவும் அதே சமயம் பக்திமிக்கவராகவும் விவரிக்கப்படுகிறார். இவர் காமரூப மன்னன் பால வர்மனின் மகள் அமிர்தபிரபாவை மணந்தார். இவரின் மனைவி காஷ்மீரை நிறுவியதாகத் தெரிகிறது.

பதவிக்காலம்

பலிகளில் கூட விலங்குகளைக் கொல்வதைத் தடைசெய்தது, ஏராளமான புத்த விகாரைகளைக் கட்டுவது போன்றவை இவரை பௌத்தப் புரவலராகக் காட்டுகின்றன. இவர் திக்விஜயம் செய்து உலகைக் காப்பற்றினார் என்று இராஜதரங்கிணியில் அதன் ஆசிரியர் கல்கணர் விவரிக்கிறார். மேகவாகனன் முழு பூமியிலும் படுகொலைகளைத் தடுக்கும் பொருட்டு அதை மேற்கொண்டதாகக் கருதப்படுகிறது. பழைய தலைநகரான பூரணாதிஸ்தானத்தில் பல்வேறு புனிதமான கட்டிடங்களைக் கட்டினார்.[3]

இதனையும் பார்க்கவும்

சன்றுகள்

  1. Cribb, Joe. "Early Medieval Kashmir Coinage – A New Hoard and An Anomaly" (in en). Numismatic Digest volume 40 (2016). https://www.academia.edu/32663187/Early_Medieval_Kashmir_Coinage_A_New_Hoard_and_An_Anomaly. 
  2. Bakshi, S.R. (1997). Kashmir: history and people. p. 60.
  3. Kalhana. Rajatarangini.

மேலும் படிக்க

"https://tamilar.wiki/w/index.php?title=மேகவாகனன்&oldid=475373" இலிருந்து மீள்விக்கப்பட்டது