மைரங்
மைரங் | |
|---|---|
மாவட்டத் தலைமையிடம் & நகராட்சி | |
வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் மைரங் நகரத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 25°34′N 91°38′E / 25.57°N 91.63°E | |
| நாடி | |
| மாநிலம் | மேகாலயா |
| மாவட்டம் | கிழக்கின் மேற்கு காசி மலை மாவட்டம் |
| ஏற்றம் | 1,564 m (5,131 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 11,517 |
| மொழிகள் | |
| • வட்டார மொழிகள் | காசி மொழி, மகரம் மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 793120 |
| வாகனப் பதிவு | ML |
| கோப்பென் காலநிலை வகைப்பாடு | ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை |
மைரங் (Mairang), வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள கிழக்கின் மேற்கு காசி மலை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.இது மாநிலத் தலைநகரான சில்லாங்கிற்கு மேற்கே 44.3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து 1564 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்நகரத்தின் பெரும்பான்மையான மக்கள் காசி மொழி மற்றும் மகரம் மொழிகளைப் பேசுகின்றனர்.
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,452 குடியிருப்புகள் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 14,363 ஆகும். அதில் 7,083 ஆண்கள் மற்றும் 7,280 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 19.01% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 989 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.20% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடிகள் 5,655 ஆக உள்ளனர். இந்நகரத்தில் தொல்குடி சமயத்தினர் 3.49%, இந்து சமயத்தினர் 0.37%, இசுலாமியர் 0.27% கிறித்தவர்கள் 95.47% மற்றும் பிற சமயத்தினர் 0.31% வீதம் உள்ளனர்.[1]