ராகா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ராகா (Raga), வடகிழக்கு இந்தியாவின் அருணாசலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள காம்லே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு வடக்கில் 100 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 245 குடியிருப்புகள் கொண்ட ராகா கிராம ஊராட்சியின் மக்கள் தொகை 1,281 ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 78.78% ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடியினர் 1,160 பேர் உள்ளனர்.