ராணா அய்யூப்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 19:14, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றாவணம்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ராணா அய்யூப்
பிறப்பு1 மே 1984 (1984-05-01) (அகவை 42)
தேசியம்இந்தியர்
பணிபத்திரிகையாளர், புலனாய்வு இதழாளர் மற்றும் அரசியல் விமர்சகர்
சமயம்இசுலாம்
சமயப் பிரிவுசுன்னி இசுலாம்

ராணா அய்யூப் என்பவர் இந்தியப் பெண் பத்திரிகையாளர், புலனாய்வு இதழாளர் மற்றும் அரசியல் விமர்சகர் ஆவார். தகெல்கா என்னும் புலனாய்வு இதழில் பணி புரிந்தவர்.[1]

2002இல் குசராத்தில் நிகழ்ந்த முசுலிம்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் பற்றி "குசராத்து பைல்ஸ்: அனாடமி ஆப் கவர் அப்" என்னும் பெயரில் ஒரு நூல் எழுதி வெளியிட்டுள்ளார்.[2] மைதிலி தியாகி என்னும் பெயரில் ரானா அய்யூப் குசராத்தில் தங்கி, குசராத்து மாநில அரசின் அதிகாரிகளையும் காவல்துறை அதிகாரிகளையும் சந்தித்து 2002 இல் நடந்த குசராத்துக் கலவரம் தொடர்பான தரவுகளைச் சேகரித்தார்.

இவரது துணிச்சல் மிக்க செயலைப் பாராட்டி 2011 ஆம் ஆண்டுக்குரிய சான்ஸ்க்ரிதி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[3]

சான்றாவணம்

"https://tamilar.wiki/w/index.php?title=ராணா_அய்யூப்&oldid=482816" இலிருந்து மீள்விக்கப்பட்டது