லின் கிங்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 00:30, 25 ஏப்பிரல் 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
லின் கிங்
படிமம்:Lin King, translator, at the 2024 National Book Awards finalist reading 4.jpg
2024 இல் கிங்
தாய்மொழியில் பெயர்金翎
பிறப்புதிசம்பர் 6, 1993 (1993-12-06) (அகவை 32)
நியூ யோர்க்,அமெரிக்கா
கல்விபிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (இளங்கலை)
கொலம்பியா பல்கலைக்கழகம் (MFA)
பணிஎழுத்தாளர், மொழிபெயர்பாளர்
விருதுகள்Freeman Award
National Book Award for Translated Literature
வலைத்தளம்
https://www.lin-king.net/

லின் கிங் ( Lin King, பிறப்பு திசம்பர் 6, 1993) என்பவர் ஒரு தைவானிய மற்றும் அமெரிக்க எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். 2024-ல், ஜின் லிங்கும் எழுத்தாளர் யாங் ஷுவாங்சியும் தைவான் பயணநூல் என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்காக , மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியத்திற்கான தேசிய புத்தக விருதை பெற்றனர்.

துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்

கிங் 1993 இல் நியூயார்க்கில் தைவானிய அமெரிக்க பெற்றோருக்கு பிறந்தார். இவருக்கு ஒரு வயதாக இருந்தபோது குடும்பம் தைவானின் தாய்பெக்கு குடிபெயர்ந்தது. தைவானில் இராணுவச் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு, கிங் அங்கு வளர்ந்தார். [1] தைவான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையையும் பெற்றுள்ள இவர் மாண்டரின் சீனம், ஜப்பானியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர், மேலும் தைவானிய ஹோக்கியன் மொழியிலும் இவருக்கு ஓரளவு தேர்ச்சி உண்டு. [2]

2012 இல் தாய்பெ அமெரிக்கப் பள்ளியில் படித்து முடித்த பிறகு, கிங் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், அங்கு அவர் தி டெய்லி பிரின்ஸ்டோனியன் இதழில் ஒரு எழுத்தாளரானார். 2016 இல் பிரின்ஸ்டனில் ஆங்கில இலக்கியம், படைப்பு எழுத்து மற்றும் கிழக்கு ஆசிய ஆய்வுகளில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் இவர் 2022 இல் எலிசா ஷாப்பல் மற்றும் ஜெர்மி தியாங் ஆகியோரின் கீழ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் புனைவு மற்றும் இலக்கிய மொழிபெயர்ப்பில் நுண்கலை முதுகலைப் பட்டம் பெற்றார். [3]

தொழில்

கிங்கின் சொந்த ஆங்கில படைப்புகள் ஜாய்லேண்ட், பாஸ்டன் ரிவியூ மற்றும் பிற பல வெளியீடுகளில் வெளிவந்துள்ளன. [4] 2018 ஆம் ஆண்டில், கிங் தனது "அப்பிடைட்" என்ற சிறுகதைக்காக வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கான பி.இ.என்/ராபர்ட் ஜே. டாவ் சிறுகதை பரிசைப் பெற்றார், இது எஸ்.எல்.ஐ.சி.இ. இல் வெளியிடப்பட்டது. [5] அதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் The PEN America Best Debut Short Stories பதிப்பில் வெளியிடப்பட்டது. [6]

2023-இல், கிங் தி பாய் ஃப்ரம் கிளியர்வாட்டர்: புக் 1 ( யு பெய்-யுன் மற்றும் சோ ஜியான்-சின் எழுதியது ) என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை லெவின் கெரிடோ பதிப்பகத்தால் வெளியிட்டார். இவர் அதன் தைவானிய, மாண்டரின் சீன மற்றும் ஜப்பானிய மொழிபெயர்ப்புகளைப் படித்து, மொழிபெயர்த்தார். [1] புக்லிஸ்ட், ஒரு நட்சத்திர மதிப்பாய்வில், "திறமையான பன்மொழிப் புலமைமிக்க கிங்கின் மொழிபெயர்ப்பின் வெற்றி இது. அவர் தைவானிய ஹோக்லோ, மாண்டரின் சீன மற்றும் ஜப்பானிய மொழிகளை மூலத்தில் கலைநயத்துடன் மொழிபெயர்த்துள்ளார்" என்று குறிப்பிட்டது. [7] இது பின்னர் 2023 இல் ஃப்ரீமேன் விருதை பெற்றது. [8] தி பாய் ஃப்ரம் கிளியர்வாட்டர்: புக் 2, 2024 இல் அதே விருதைப் பெற்றது. [9]

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவியாக இருந்தபோது, கிங் யாங்குடன் தைவான் பயணநூல் என்ற நூலிலின் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டார், அதன் பிறகு அது 2024 இல் கிரேவுல்ஃப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. [10] ஆசிய அமெரிக்க எழுத்தாளர்கள் பட்டறையின் மூலம் கிங், யாங்கைச் சந்தித்தார், அங்கு யாங்கின் சீசன்ஸ் ஆஃப் புளூம் புதினத்தின் ஒரு பகுதியின் கிங்கின் மொழிபெயர்ப்பு வெளிவந்தது. பின்னர் யாங், மாண்டரின் சீன மொழியில் தைவான் பயணநூலைப் படித்து, சாத்தியமான மொழிபெயர்ப்புக்காக அதைப் பற்றி சிந்திக்குமாறு கிங்கிடம் கேட்டார். அதன் பிறகு அவர்கள் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை கிரேவுல்ஃப் பதிப்பகத்திடம் சேர்ப்பதற்கு முன்பு பல பதிப்பகங்களுக்கு அனுப்பினர். அங்கு, யாங் மற்றும் கிங் யுகா இகாரஷியுடன் இணைந்து, புத்தகத்தை ஒரு "மெட்டா-நாவலாக" செயல்படுத்துவதில் பணியாற்றினர். [2] [11]

2024 ஆம் ஆண்டில், தைவான் பயணநூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்காக கிங் மற்றும் யாங் மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கான தேசிய புத்தக விருதை பெற்றனர். [12] அடுத்த ஆண்டில், ஆசிய சங்கத்தின் சீனா புக்ஸ் ரிவியூ அமைப்பால் வழங்கப்படும், சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த இலக்கியத்திற்கான பைஃபாங் ஷெல் புத்தகப் பரிசை கிங் மற்றும் யாங் பெற்றனர். பின்னர் 2025 இல், கிங்கின் மொழிபெயர்ப்பு அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் முதல் மொழிபெயர்ப்பு பரிசை வென்றதுடன், தேசிய மொழிபெயர்ப்பு விருதுக்கான இறுதி பட்டியலில் இடம்பெற்றது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Guzmán, Levine (2023-11-14). "INTERVIEW: Lin King on translating THE BOY FROM CLEARWATER". The Beat (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-11-21.
  2. 2.0 2.1 "Lin King". www.timidmag.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-11-21.
  3. Saldarriaga, Nicole (July 21, 2021). "Writing Students Ye Odelia Lu and Lin King Contribute to 'Queer Time: A Special Notebook of Taiwanese Tongzhi Literature'". Columbia University. https://arts.columbia.edu/news/writing-students-ye-odelia-lu-and-lin-king-contribute-queer-time-special-notebook-taiwanese. 
  4. King, Lin (2022-05-31). "Ha-fu, Half, Halfie" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-11-21.
  5. "PEN/Robert J. Dau Short Story Prize for Emerging Writers". PEN America (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-11-21.
  6. "What to Read When You're a PEN/Robert J. Dau Short Story Prize Winner". The Rumpus (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-08-03. Retrieved 2024-11-21.
  7. Hong, Terry (September 15, 2023). "The Boy from Clearwater by Pei-Yun Yu". https://www.booklistonline.com/The-Boy-from-Clearwater-/pid=9783953. 
  8. "Lin King's Translation "The Boy from Clearwater" Wins 2023 Freeman Award". கொலம்பியா பல்கலைக்கழகம். March 20, 2024. https://weai.columbia.edu/news/lin-kings-translation-boy-clearwater-wins-2023-freeman-award. 
  9. "'Freeman Book Awards 2024 Award Winners'" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-04-16.
  10. "'Taiwan Travelogue' wins U.S. National Book Award for Translated Literature" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-11-21. Retrieved 2024-11-21.
  11. Ma, Hairol (2024-11-19). "Why This Taiwanese Book is Masquerading as a Rediscovered Japanese Novel". Electric Literature (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-11-21.
  12. Mulroy, Clare. "Percival Everett's 'James' wins the National Book Award for fiction: See all winners". USA TODAY (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-11-21.
"https://tamilar.wiki/w/index.php?title=லின்_கிங்&oldid=488042" இலிருந்து மீள்விக்கப்பட்டது