வாவூல் மலை

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 09:48, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வாவூல் மலை (Vavul Mala) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில்கேரளப்பகுதியில் வெள்ளரிமலை வரம்பில் உள்ள சிகரமாகும். இது கேரளாவின் மலப்புரம் மாவட்டம் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது. வாவூல் மலை "ஒட்டக சிமிழை” ஒத்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,339 மீ உயரத்தில் அமைந்துள்ளது.[3] இது நீலகிரிக்கு அப்பால் மேற்குத் தொடர்ச்சி மலையில் மிக உயரமான சிகரமாகவும், கோழிக்கோடு மாவட்டத்தின் மிக உயரமான இடமாகவும் உள்ளது. இந்தப் பகுதியில் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் நீலகிரி மலைகளில் காணப்படுவதை ஒத்ததாக உள்ளன.

வாவூல் மலை
வாவூல் மலை is located in கேரளம்
வாவூல் மலை
வாவூல் மலை
வாவூல் மலைச் சிகர அமைவிடம், கேரளா
உயர்ந்த புள்ளி
உயரம்2,339 m (7,674 அடி)[1]
புடைப்பு1,479 m (4,852 அடி)[1]
ஆள்கூறு11°25′41″N 76°07′52″E / 11.428°N 76.131°E / 11.428; 76.131[2]
புவியியல்
அமைவிடம்தாமரைச்சேரி எல்லை, கோழிக்கோடு மாவட்டம் மற்றும் நிலாம்பூர் வட்டம், மலப்புரம் மாவட்டம், கேரளா, இந்தியா
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை
ஏறுதல்
எளிய வழிhike

வில்லியம் லோகன் என்பார் 1887ல் வெளியிட்ட மலபார் கையேட்டின் முதல் தொகுதி (பின்னர் 1908 ஆம் ஆண்டின் மலபார் வர்த்தமானியால் தொடரப்பட்டது) 7,677 அடி உயரமுள்ள வாவூல் மலை அரேபியக் கடலுக்கு வெகு தொலைவில் உள்ள ஒரு அடையாளமாகக் குறிப்பிடப்படுகிறது. [4]

வெள்ளரிமலைப் பகுதி மலப்புரம் ஓரமாக, கோழிக்கோடு மற்றும் வயநாட்டின் எல்லைக்கு இடையில் அமைந்துள்ளது. இது "ஒட்டக சிமிழ் மலைகள்" என்று அழைக்கப்படும் உயர் நிலப்பரப்பு. இது நீலகிரி மலைகளிலிருந்து தக்காணப் பீடபூமி மற்றும் சாலியார் நதி பள்ளத்தாக்கு ஆகியவற்றால் பிரிக்கப்பட்டுள்ளது. இது தென்னிந்தியாவில் மிகவும் கடினமான மலையேற்ற இடமாகும்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Southern India Mountain Ultra-Prominence". Peaklist.org. Retrieved 2017-08-29.
  2. "Vavul Mala, India". Peakbagger.com. Retrieved 2017-08-29.
  3. "Malappuram District - Panchayath Statistics 2011" (PDF). Archived from the original (PDF) on 2017-11-18. Retrieved 2020-10-03.
  4. Malabar Manual - Volume I
"https://tamilar.wiki/w/index.php?title=வாவூல்_மலை&oldid=495754" இலிருந்து மீள்விக்கப்பட்டது