வேத சாரம்

imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 08:01, 9 மே 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:வேதம்; added Category:வேதங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வேத சாரம் எனப்படுவது இந்து சமயத்தின் அறிவு நூலான வேதம் கூறும் சாரமாகும். அதாவது, எவ்விதமான இடையீடும் இன்றி அனைவரும் உள்ளும் புறமும், பரம்பொருளை அறிந்து களிப்புற வேதமானது எல்லார்க்கும் சொல்கின்றது.

வேதத்தின் சாரங்களாவன:

  • அந்தராத்மாவாக விளங்கும் அந்த பரமன் ஒருவனே;
  • அந்த ஒருவனை அன்றி வேறில்லை;
  • அவன் வானாகி மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி, உயிர்க்கு உயிராய் ஆகி நிறைந்து உள்ளான்;
  • உயிர்கள் உள்ளந்தோறும் இடம் கொண்டுள்ளான்;
  • அவன் பரிசுத்தன், இன்பமயமானவன், அறிவானவன்;
  • தங்கத்தை மாசு மறைத்துக் கொண்டிருப்பது போல அவனது நிஜ சொரூபத்தை நமது மனமாசுக்கள் மறைக்கின்றன.பல்வேறு சுத்த சாதனங்களால் நம் மனமாசைத் துடைத்து, மனத்தை தூய்மையாக்கினால் அவ்விறைவனைக் காணலாம்.

உசாத்துணை நூல்கள்

  • துரை இராஜாராம். (ஜூன் 2000). திருமூலர் வாழ்வும் வாக்கும். :நர்மதா பதிப்பகம். பக்கம் 66.
"https://tamilar.wiki/w/index.php?title=வேத_சாரம்&oldid=503426" இலிருந்து மீள்விக்கப்பட்டது