வைட்டிலா - 2
வைட்டிலா - 2 (VTL 2), வேளாண் பெயர்; உயரமான செரு விரிப்பு (Cheruvirippu Tall), எனப்படும் இந்த நெல் வகை, கேரளாவின் ஒரு புதிய நெல் இரகமாகும்.[1] தென்னிந்தியாவின் கேரள மாநில எர்ணாகுளம் மாவட்டம், வைட்டிலா பகுதியில் அமைந்துள்ள "நெல் ஆராய்ச்சி நிலையம்" (RRS),[2] வெளியிட்ட இந்த நெல் இரத்தை பொதுவாக உயரமான செரு விரிப்பு எனும் வேளாண் பெயரில் அழைக்கப்படுகிறது.[3]
| வைட்டிலா - 2 VTL 2 |
|---|
| வேளாண் பெயர் |
| உயரமான செரு விரிப்பு |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 155 - 130 நாட்கள் |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆராய்ச்சி நிலையம் (RRS), வைட்டிலா |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
பின்னணி
கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் உப்புத்தன்மை கொண்ட பகுதிகளில் விரிப்பு பருவத்திற்கு ஏற்ற நெல் வகையான இது, நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 125 - 130 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. மேலும் இந்நெல் இரகத்தின் அரிசி, தடித்த சிவப்பு நிறமாகும்.[1][4]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 "Paddy varieties of Kerala - Medium duration varieties - Vyttila-2 (Cheruvirippu Tall)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-10.
- ↑ Rice Research Station, Vyttila
- ↑ "KAU Agri-infotech portal". www.celkau.in (ஆங்கிலம்) - 2019. Retrieved 2025-10-10.
- ↑ "Rice Variety information Pokkali lands". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-10.