யாழன் ஆதி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:15, 1 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsactive = | spouse..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)


யாழன் ஆதி தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர்களில் ஒருவர். புகைப்படத்திற்கு நன்றி eraaedwin.com தலித் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாக செயல்பட்டுவரும் யாழன் ஆதி தலித் முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதிவருகின்றார். பல்வேறு இதழ்களில் படைப்புகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. இவருடைய கவிதைகள் ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் இவருடைய செவிப்பறை நூலை பாடப்புத்தகமாக வைத்திருந்தது. கவிதை மட்டுமில்லாமல் அனைத்து இலக்கிய வகைமைகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கின்றது. புதிய தலித் எழுத்தாளர்களைப் பற்றி தலித் முரசில் மாற்றுப் பாதை என்னும் கட்டுரைத்தொடரை எழுதி வருகிறார். சாம்பல் என்னும் குறும்படத்தையும் இவர் இயக்கி இருக்கின்றார்.

யாழன் ஆதி
அறியப்படுவதுஎழுத்தாளர்

இசை உதிர் காலம், செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா, போதலின் தனிமை, காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும், யாருமற்ற சொல், மனிதம் கொன்ற சாதியம், ஆம்பூர் (ஊர் வரலாற்று நூல்) ஆகிய படைப்புகளை வெளியிட்டுள்ளார். தம்மபதம் என்னும் புத்தரின் போதனைகளை ஆங்கிலம் வழி தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.

"https://tamilar.wiki/w/index.php?title=யாழன்_ஆதி&oldid=90067" இலிருந்து மீள்விக்கப்பட்டது