மு. ராஜன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:57, 13 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = | imagesize = | caption = | birth_name = | birth_date = சூன் 11 1966 | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsactive = | s..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மு. ராஜன்
பிறப்புசூன் 11 1966
அறியப்படுவதுஎழுத்தாளர்

மு. ராஜன் (பிறப்பு: சூன் 11 1966) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். 'முரசுராஜன்' எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் கிறிஸ்த்தவ மத போதகருமாவார். மேலும் இவர் மலேசியத் தமிழ் கிறிஸ்த்தவ எழுத்தாளர் சங்கத்தின் செயலாளரும், மலேசியத் தமிழ் பாவலர் மன்றத்தின் செயற்குழு உறுப்பினரும்கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு

1984 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கிறிஸ்த்தவ சமயக் கட்டுரைகள், சிறுகதைகள், புதுக்கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "இயேசு செய்த அற்புதங்கள்" (2002)
  • "கவிஞர் கண்ட இயேசு" (தொகுப்பு)
  • "குமரிக் கண்ட நாகரிகமும் விவிலியமும்"

பரிசுகளும் விருதுகளும்

  • "இலக்கியத் தென்றல்" விருது (1996) உலகத் தமிழ் கிறிஸ்த்துவ எழுத்தாளர் சங்கம்
  • "இலக்கிய ஒளி" விருது (1996) சென்னை தாய்மண் இலக்கியக் கழகம்
  • "முத்தமிழ் மாமணி" விருது (2002) சென்னை பாரதிதாசன் நினைவுநாள் விழா

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=மு._ராஜன்&oldid=90857" இலிருந்து மீள்விக்கப்பட்டது