இராசாவலிய

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:30, 12 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''இராசாவலிய''' (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) என்பது ஒரு பண்டைய இலங்கை வரலாற்று நூல் ஆகும்.<ref>{{Cite web|url=http://ebook.lib.hku.hk/CADAL/B3138965X/|title=The rajavaliya : or, A historical narrative of Sinhalese ki..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இராசாவலிய (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) என்பது ஒரு பண்டைய இலங்கை வரலாற்று நூல் ஆகும்.[1] விஜயன் எனும் இலங்கை மன்னனின் வரலாற்றில் இருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் எனும் கண்டி மன்னனின் வரலாறு வரை இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பற்றி தொடர்ச்சியாக எழுதப்பட்ட இலக்கிய மூலாதாரமான இது சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது.[2] இராஜாவலிய அரசியல் செய்திகளுக்கே முதலிடம் கொடுத்துள்ளது. சமயச் செய்திகளை விளக்கவில்லை. இலக்கிய நடையைத் தவிர்த்து பொதுமக்களைக் கவரும் வண்ணம் எளிய நடையில் இந்நூல் அமைந்துள்ளது. குறிப்பாக கி.பி. 1359 - ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்தைப் பற்றி அறிய இந்நூல் பெரிதும் பயன்படுகிறது. இது பலரால் எழுதப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "The rajavaliya : or, A historical narrative of Sinhalese kings from Vijaya to Vimala Dharma Surya II, to which are added a glossary and a list of sovereigns / ed. by B. Gunasekara". Archived from the original on 2018-04-20. Retrieved 2016-08-27.
  2. "Rajavaliya | historical Ceylonese chronicle". Archived from the original on 2020-11-13. Retrieved 2016-08-27.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இராசாவலிய&oldid=98938" இலிருந்து மீள்விக்கப்பட்டது