அரசு மணிமேகலை


அரசு மணிமேகலை (செப்டம்பர் 9, 1945 - ஆகத்து 5, 2001) தமிழிலக்கியத்தில் பன்முகச் சிந்தனைகளோடு கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், சிறுவர் சிறுகதைகள்[1] போன்ற படைப்புகள் பல தந்தவர்.

அரசு மணிமேகலை
அரசு மணிமேகலை
இயற்பெயர்/
அறியும் பெயர்
அரசு மணிமேகலை
பிறந்ததிகதி செப்டம்பர் 9, 1945
இறப்பு ஆகத்து 5, 2001

பிறப்பும், இளமையும்

காஞ்சிபுரத்தில் 09.9.1945 இல் ரத்தினசாமி, ராஜாகண்ணம்மாளுக்கு மகளாகப் பிறந்தவர். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்ற இவர் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அதோடு மட்டுமின்றி திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித் துறை திட்டக்குழு உறுப்பினராகவும் செயலாற்றியுள்ளார். இரண்டாவது உலகத் தமிழ்மாநாட்டின் போது மாநாட்டுமலர்த் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு சிறப்பாகச் செயலாற்றியவர்.

சிறப்புகள்

எழுத்தாளர், பேராசிரியர், சொற்பொழிவாளர், வானொலி- தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறந்தவர். திரைப்படக் கதை வசனம், பாடல்கள் எழுதிப் புகழ்பெற்றவர். பாரதியார், சென்னைப் பல்கலைக்கழகங்களில் இவரது படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

படைப்புகள்

இவர் எழுதிய நூல்கள் மொத்தம் 54. இவரது முதற்கவிதை 1980 இல் வெளிவந்தது.

கவிதை நூல்கள்

  1. ஒரு வானம்பாடி வாய்திறக்கிறது
  2. மழலைப் பூக்கள்
  3. வெளிச்ச மின்னல்கள்

கட்டுரை நூல்கள்

  1. பெரியார் சிந்தனையில் பெண்கள்
  2. கவிதைக் கதிரவன் தாகூர்
  3. நாடும் வீடும் நலம் பெற
  4. தமிழகத்து மும்மணிகள்

சிறுகதைத் தொகுப்புகள்

  1. நிஜங்களும் நிழல்களும்
  2. புல்லைத் தின்னும் புலிகள்
  3. மூன்று கால் மனிதர்கள்
  4. வசந்தம் வந்தது

புதினங்கள்

  1. கனவு சுமக்கும் கண்கள்
  2. தீக்குளிக்காத கீதைகள்
  3. என்றும் தொடரும் பயணம்

சிறுவர் நூல்கள்

  1. சிறுவனும் சிங்கக் குட்டியும்
  2. முயன்றால் முன்னேறலாம்
  3. வானத்தை வளைப்போம்

உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

விருதுகள்

பாவேந்தர் விருது, கலைமாமணி, ஜான்சிராணி, வேலு நாச்சியார், அருந்தமிழ்த் தென்றல் போன்ற ஐந்து விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழக அரசு,[2] குழந்தை எழுத்தாளர் சங்கம், பிரான்சு தமிழ்ச்சங்கம், ஆனந்தவிகடன், கலைமகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பரிசுகளையும் பெற்றுள்ளார்.

மறைவு

தமிழ் எழுத்துலகில் பல சாதனைகள் படைத்த அரசு. மணிமேகலை 05.8.2001 அன்று காலமானார்.

மேற்கோள்களும் உசாத்துணைகளும்

  1. "Chandra N : Contemporary Tamil Women's Writing". Muse India. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 22, 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "விருது பெற்றோர் பட்டியல் – தமிழ் வளர்ச்சித் துறை" (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-03-24.
  • ப. முத்துக்குமாரசுவாமி இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க்கவிஞர்கள்- பழனியப்பா பிரதர்ஸ்.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=அரசு_மணிமேகலை&oldid=9165" இருந்து மீள்விக்கப்பட்டது