எம். எம். பகுர்தீன் பாவா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

எம். எம். பகுர்தீன் பாவா (பிறப்பு 1936) பக்கீர்பைத் கலையில் ஈடுபாடு கொண்ட ஒரு சிரேஷ்ட கலைஞராவார்.

வரலாற்றுச் சுருக்கம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பகுதி, சிலாபத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், யூசுப் முஹிதீன் பக்கீர், கொலுசம் பீபீ தம்பதியினரின் மகனாவார். எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் 6-ம் வகுப்பு வரை கற்றார். இவரின் மனைவி எம். எஸ். பாத்தும்மா. இவருக்கு 12 பிள்ளைகள் உள்ளனர்.

பக்கீர்பைத் பாடல்.

தெருத் தெருவாக, பகுதி பகுதியாக, ஊர் ஊராகப் பக்கீர் பாடல்களைப் பாடி, தன் ஜீவனோபாயத்தைக் கழித்து வருகின்றார்.

பக்கீர்பைத் கருப்பொருள்

பலவிதமான புத்தகங்கள்ää இஸ்லாமியப் பாடல்கள், நற்கீர்த்தனைகள், பழைமை வாய்ந்த ஆனந்தக்களிப்புக்கள், பாத்திமா நாயகியின் வரலாறு, நூறு மசாலா போன்ற பல பாடல்களைப் பாடி புகழ்பெற்றவர்.

விருதுகள்

1994-ம் ஆண்டில் இலங்கையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு 'வாழ்வோரை வாழ்த்துவோம்' நிகழ்ச்சியில் இவருக்கு "நூருல் கஸீதா" (கவிதை ஒளி) விருதும், பொற்கிழியும் வழங்கி கௌரவித்தது.

ஆதாரம்

'வாழ்வோரை வாழ்த்துவோம்' நினைவு மலர், வெளியீடு: முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் - 1994.

வெளி இணைப்புகள்