கலைமாணி (சீன அறிவிப்பாளர்)
Jump to navigation
Jump to search
கலைமாணி என்பவர் சீனா, பீஜிங்கில் ஒலிப்பரப்பாகும் சீனத் தமிழ் வானொலியின் தமிழ் அறிவிப்பாளராகப் பணி புரிபவர் ஆவார். இவர் ஒரு சீனராவார். இருப்பினும் சீனத் தமிழ் வானொலியில் பணியாற்றுவதற்கென்றே தமிழ் மொழியைக் கற்ற இவர், தனது பெயரையும் தமிழ்ப் பெயராக "கலைமாணி" என சூட்டிக்கொண்டு பணியாற்றி வருகிறார். தமிழ் மொழியை இயல்பாக பேசவும் கூடியவர்.[1]
சிறப்பு
இவரது தமிழ் ஒலிப்பு, தாய்மொழி தமிழரின் ஒலிப்பில் இருந்து சற்று வேறுபட்டதாக இருந்தபோதிலும், தமிழ் மொழியில் பிறமொழி கலப்பின்றி பேசுவது ஒரு தனிச்சிறப்பாகும்.