கிளாந்தான் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
தீபகற்ப மலேசியாவின் கிழக்குக்கரை மாநிலமான கிளாந்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரே தமிழ்ப்பள்ளி பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி. கோலக்கிரை மாவட்டத்தில் அமைந்து உள்ளது. 1945 டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி தோற்றுவிக்கப் பட்டது.
முன்பு இந்தப் பள்ளிக்கு பாசீர் காஜா தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Pasir Gajah Kelantan) என்று பெயர். இப்போது பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி (SJKT Pasir Gajah Kelantan) என்று மாற்றம் கண்டுள்ளது.[1]
1980-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கிளாந்தான் மாநிலத்தில் 3 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. 1990-களில் மாணவர்ப் பற்றாக்குறை. அதனால் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தேசிய மலாய்ப் பள்ளிகளாக மாற்றப் பட்டன. எஞ்சிய ஒரே ஒரு தமிழ் பள்ளிதான் இந்தப் பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி.[2]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | ஆசிரியர்கள் | மாணவர்கள் |
---|---|---|---|---|---|---|---|
DBD7404 | பாசீர் காஜா தோட்டம் | SJK(T) Ladang Pasir Gajah[3] | பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி | 18000 | கோலா கிராய் | 9 | 36 |
மேற்கோள்கள்
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
- ↑ At the beginning of 1980’s there were only 3 Tamil Schools in Kelantan. In 1990’s, 2 Tamil Schools converted to national schools (SK) and only SJK Ladang Pasir Gajah remained as the one and only Tamil school in Kelantan.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "பாசிர் காஜா தமிழ்ப்பள்ளி". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2 December 2021.
மேலும் காண்க
- மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- ஜொகூர் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பகாங் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பேராக் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கெடா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கிளாந்தான் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பெர்லிஸ் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பினாங்கு மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- மலேசிய மாவட்டங்கள்
- மலேசிய_மாவட்டங்கள்#கிளாந்தான்