குளம்பனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

குளம்பனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கப்பாடல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அது நற்றிணை 288 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.

குளம்பா தாயனார் என்னும் புலவர் குளம்பா என்னும் ஊரில் வாழ்ந்தவர். இந்தப் புலவர் குளம்பனார் குளம்பா என்னும் ஊரிலிருந்து வந்தவர் ஆதலால் குளம்பனார் என்னும் பெயரைப் பெற்றுள்ளார்.

நற்றிணை 288 சொல்லும் செய்தி

  • குறிஞ்சித்திணை

தலைவன் தலைவிக்காக வெளியில் காத்திருக்கிறான். திருமணம் செய்துகொண்டு இவளை அடைக என்று சொல்ல விரும்பும் தோழி தலைவிக்குச் சொல்வது போலத் தலைவன் காதில் விழுமாறு சொல்கிறாள்.

மயில் அருவித் துளியில் நனையும். அது பரக்கிளையில் ஏறி நின்றுகொண்டு ஆடி வெயிலில் தன்னைப் புலர்த்திக்கொள்ளும். இப்படிப்பட்ட நாட்டுக்குத் தலைவர் அவர்.

அவர் பிரிவால் என் நெற்றி பசந்துகிடக்கிறது. இதனை உணராத தாய் வேலனை அழைத்துவந்து நிறைநாழி நெல்லை அவன் முன் வைத்து, தன்னை ஒத்த செம்முது பெண்டிர் பலரையும் கூட்டிக், கட்டு என்னும் கழற்சிக்காயை உருட்டிப் பார்த்துக் காரணம் சொல்லும்படி கேட்டால், தினைப்புனம் காக்கும்போது நெடுவேள் முருகன் வருத்தினான் என்று வேலன் சொன்னால், அவருக்கும் நமக்கும் உள்ள உறவு என்னாவது?

"https://wiki1.tamilar.wiki/index.php?title=குளம்பனார்&oldid=12412" இருந்து மீள்விக்கப்பட்டது