சித்திரை திங்கள் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சித்திரை திங்கள்
இயக்கம்மாணிக்கம்
இசைசரத் பிரியதேவ்
நடிப்புஅசுவத்
சுவாதி
ஒளிப்பதிவுஏ. எம். அருண்
வெளியீடு2014 பிப்ரவரி
மொழிதமிழ்

சித்திரை திங்கள் 2014 பிப்ரவரியில் வெளிவந்த திரைப்படமாகும், இப்படத்தை மாணிக்கம் இயக்கியுள்ளார்[1], அசுவின், சுவாதி போன்ற பலர் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் வெங்கிப்பட்டி என்ற ஒரு கிராமம். அங்கே காதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் பஞ்சாயத்து தலைவராக தீரன். இவருக்கு மனைவி கிடையாது. ஆனால், அசுவந்தை தத்துப் பிள்ளையாக வளர்த்து வருகிறார். அதே ஊரில் இருக்கும் சுவாதியும், அசுவந்தும் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர்.

இவர்கள் காதலுக்கு சுவாதியின் தாய்மாமா ராஜானந்த் எதிர்ப்பாக இருக்கிறார். இருந்தும் அவருக்குத் தெரியாமல் இருவரும் ஒருவருக்கொருவர் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒருநாள் இந்த காதல் சோடி ஊரை விட்டு ஓடிவிட திட்டமிடுகிறது. அந்த வேளையில்தான் தன்னுடைய அம்மா யார் என்பது நாயகன் அசுவந்துக்கு தெரிய வருகிறது. அவள் யார் என்பது தெரிந்திருந்தும் அசுவந்திடம் தீரன் மறைக்க காரணம் என்ன? அசுவந்துடைய அம்மாவுக்கும், தீரனுக்கும் என்ன தொடர்பு? என்பதை இறுதியில் சொல்கிறார்கள்.

மேற்கோள்கள்