ஆரணி (திருவள்ளூர் மாவட்டம்) (மூலத்தை காட்டு)
05:03, 22 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
, 22 நவம்பர் 2019→ஆரணிக் கோட்டை
imported>குணசேகரன்.மு No edit summary |
imported>குணசேகரன்.மு |
||
வரிசை 114: | வரிசை 114: | ||
=== ஆரணிக் கோட்டை === | === ஆரணிக் கோட்டை === | ||
தொண்டை மண்டலத்தில் பல்லவர் வரலாற்று பக்கங்களிலும், சம்புவராயர் வரலாற்று பக்கங்களிலும் தனியிடத்தை பிடித்து இருப்பது ஆரணி பகுதி. | |||
பிற்கால சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்களாக குறுகிப்போன பல்லவர் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவான கடம்பூர் சம்புவராயர்கள் படைவீட்டை தலைநகராக கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தனர். இவர்கள் சோழர்களின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு சுதந்திரமாக தங்கள் மூதாதையர்களின் பெருமையை நிலைநாட்ட முயன்றனர் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று. இவர்களில் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் சேந்தமங்கலத்தில் சோழர் படையை வென்று 50 ஆண்டுகளுக்கும் மேல் அங்கிருந்தபடியே ஆட்சி செய்தான் என்பதும் வரலாறு. இவ்வாறு படைவீடு சாம்ராஜ்யத்துடன் இணைந்திருந்த [[ஆரணி]], [[படவேடு|படைவீடு]] படிப்படியாய் தனது பெருமையை இழந்த நிலையில் விஜயநகர பேரரசின் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. விஜயநகர பேரரசின் வேலூர் சிற்றரசுக்கு உட்பட்ட மண்டலமாக ஆரணி விளங்கியது. [[ஆரணி]] மண்டலேஸ்வரர்கள், தங்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதியை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், நிர்வாகம் செய்யவும் வசதியாக கோட்டை கட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இப்படி கட்டப்பட்டதுதான் இன்று கான்கிரீட் கட்டிடங்களின் அடித்தளமாக மாறிப்போயுள்ள ஆரணி கோட்டை. இந்த கோட்டைக்காக ஆரணி அடுத்த படைவீட்டை சுற்றியுள்ள குன்றுகளில் இருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. விஜயநகர பேரரசர்களின் கோட்டை கொத்தளங்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குமோ அத்தனை சிறப்பம்சங்களும் ஆரணி கோட்டையிலும் இடம்பெற்றிருந்தன. மண்டலேஸ்வரர்களுக்கான அரண்மனைகள், அதிகாரிகள், படைவீரர் குடியிருப்புகள், ஆயுத கிடங்கு, குதிரைகளுக்கான லாயம் என அனைத்து அம்சங்களுடன், சுற்றிலும் அகழியுடன் இந்த கோட்டை விளங்கியது. அதோடு சூரியகுளம், சந்திர குளம், சிம்மக்குளம் போன்ற குளங்களும் கோட்டையை ஒட்டி அமைந்தன. இதில் இரண்டு குளங்கள் மட்டுமே இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன. அகழியும் தூர்ந்து ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. விஜயநகர பேரரசுக்கு பிறகு இஸ்லாமியர் வசம் சிக்கிய ஆரணி பகுதி பின்னர் மராட்டியர் வசம் சென்றது. அதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பிடியில் இது சிக்கியது. பின்னர் நடந்த ஆற்காடு நவாபு வாரிசு பூசலில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக கிளம்பிய பிரெஞ்சுப்படைக்கும், ராபர்ட் கிளைவ் தலைமையிலான கிழக்கிந்திய படைக்கும் இடையே கி.பி.1760ல் நடந்த கர்நாடக போரில் ஆற்காடு கோட்டையும், ஆரணி கோட்டையும் கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது[[https://tiruvannamalai.nic.in/ta/]]. | |||
அப்போது மதுரையை ஆண்ட மகமூத்கான் என்ற மருதநாயகம், ராபர்ட்கெல்லி ஆகியோர் கிழக்கிந்திய கம்பெனி படைக்கு ஆதரவாக ஆரணி கோட்டையை தாக்கினர். இந்த தாக்குதலில் ஆரணி கோட்டையின் பெரும் பகுதி நாசமானது. இந்த போரில் வீரமரணம் அடைந்த ராபர்ட் கெல்லி, கர்னல் வைசூப் உட்பட பலரின் நினைவாக நினைவுத்தூண்கள் எழுப்பப்பட்டன. இதில் கெல்லியின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண் இப்போதும் கோட்டை மைதானத்தில் கம்பீரமாக நிற்கிறது. மற்றவர்களின் நினைவுத்தூண்கள் அருகருகே அமைந்துள்ளன. பல நினைவுத்தூண்கள் இருந்த இடங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. கிழக்கிந்திய கம்பெனியின் வசம் கோட்டை வந்த பின்னர் ஆரணியின் நிர்வாகம் முழுவதும் அவர்கள் வசமே சென்றது. பின்னாட்களில் வடாற்காடு மாவட்டத்தின் அங்கமாக ஆரணி மாறி, பட்டு நெசவு, விவசாயம் என்ற இரண்டு பிரதான தொழில்களில் புகழ்பெற்று வளர்ச்சியடைய தொடங்கியது. இங்கிலாந்து ராணியின் நேரடி பார்வையில் நடந்த பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது [[ஆரணி தாலுகா]] தலைநகராக பரிணமித்தது. அப்போது இதன் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களும் கோட்டைக்குள் இருந்த கட்டிடங்களில் பிரிட்டிஷாரால் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அந்த அலுவலகங்கள் இப்போதும் அங்கு அதே கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அதோடு கோட்டை வளாகத்தில் புதிய கட்டிடங்களும் எழுப்பப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. | |||
அகழியால் சூழப்பட்ட ஒரு கோட்டை பகுதியில் உள்ள நகரம் ஆகும். இக்கோட்டை பகுதியில் வீடுகள் வன துறை, துணை சிறை, பதிவு அலுவலகம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், விவசாய அலுவலகம், அரசு சிறுவர்கள் உயர்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் சுப்ரமணிய சாஸ்திரி உயர்நிலைப்பள்ளி ஆகியன அமைந்துள்ளன[https://m.youtube.com/watch?v=4_vStJS0AiA]. | அகழியால் சூழப்பட்ட ஒரு கோட்டை பகுதியில் உள்ள நகரம் ஆகும். இக்கோட்டை பகுதியில் வீடுகள் வன துறை, துணை சிறை, பதிவு அலுவலகம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், விவசாய அலுவலகம், அரசு சிறுவர்கள் உயர்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் சுப்ரமணிய சாஸ்திரி உயர்நிலைப்பள்ளி ஆகியன அமைந்துள்ளன[https://m.youtube.com/watch?v=4_vStJS0AiA]. |