சொக்கநாத நாயக்கர் அரண்மனை

சொக்கநாத நாயக்கர் அரண்மனை, என்பது தற்போது அதிராரப்பூர்வமாக ராணி மங்கம்மாள் மகால் என அழைக்கப்படுவது. பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த ஒரு அரண்மனையாகும். இது மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டது. இது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் உள்ளது. இந்த அரண்மனையை மதுரை ஆட்சியாளரானசொக்கநாத நாயக்கர் கட்டினார். இது மதுரை நாயக்கர்கள் திருச்சிராப்பள்ளியைத் தலைநகராகக் கொண்டு 1616 முதல் 1634 வரையும் பின்னர் 1665 முதல் 1736 இல் ஆண்டபோது இது தர்பார் என அழைக்கப்பட்டது. தற்போது இந்த அரண்மனையில் திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் செயல்படுகிறது. அரண்மனையின் வளாகத்தில் பல அரசு அலுவகங்கள் செயல்படுகின்றன.

Naicker mahal trichy -1.jpg
அரண்மனையின் உட்புறம்

மேற்கோள்கள்