திசைப்பெயர் புணர்ச்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழில், திசைப் பெயர்ப் புணர்ச்சி என்பது கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு ஆகிய சொற்கள் தம்மோடு தாம் இணைவதும்,பிற சொற்களுடன் இணைவதும் ஆகிய புணர்ச்சியாக் ஆகும். இதன் புணர்ச்சி விதிகள் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் எடுத்துரைக்கின்றன.

நன்னூல் விதி

(நூற்பா.186)

விளக்கம்

திசைச் சொல்லோடு திசைச்சொல்லும் பிற சொற்களும் இணையும் போது நிலைமொழி ஈற்றில் அமைந்த உயிர்மெய்யும்,அதனுடன் வந்த க் - என்னும் ஒற்றெழுத்தும் கெடும்.(கிழக்கு,வடக்கு)

மேற்கு,தெற்கு என்னும் சொற்கள் புணருகையில் நிலைமொழி ஈற்று உயிர்மெய் கெட்டு,ற்- என்னும் எழுத்து வருமொழியில் வரக்கூடிய சொல்லை பொருத்து ன்- ஆகவோ ல்-ஆகவோ மாறும்.

விதியில் கடைசியாகக் கூறப்பட்ட "பிற" என்ற படியால் சொற்களின் அடிப்படையை வைத்து வேறு வகையிலும் புணரலாம்

எடுத்துக்காட்டு

வடக்கு + மேற்கு = வடமேற்கு

கிழக்கு + திசை = கீழ்திசை,கீழைதிசை

கிழக்கு + கடல் = கீழ்க்கடல்,கீழைகடல்,கீழ்கடல்

தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு

தெற்கு + மேற்கு = தென்மேற்கு

மேற்கு + திசை = மேல்திசை,மேற்திசை,மேலைதிசை

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு

 கருவி நூல்

நன்னூல் மூலமும் விருத்தியுரையும் (அ.தாமோதரன் அவர்களின் பதிப்பு)

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்