பொருள் மயக்கம்
Jump to navigation
Jump to search
பொருள் மயக்கம் என்பது பொருள் புரிதலில் ஏற்படும் மயக்கமே பொருள் மயக்கம் ஆகும். ஒரே தொடரில் இரண்டு பொருள்கள் நிலை பெறுவதைக் காண முடிகிறது. அவ்வாறு வருஞ்சூழலில் பொருள் புரிதலில் சில நேரங்களில் இடர் ஏற்படுவதுண்டு. இவ்வாறாக பொருள் புரிதலில் ஏற்படும் மயக்கமே பொருள் மயக்கம்.
எ.கா : யானோ கள்வன்?
நானா வைதேன்?
அவனா வந்தான்?
மேற்காண் கூற்றுக்களை வற்புறுத்தியோ அல்லது அழுத்தமாவோ சொல்லுகின்ற போது இதில் வினா ,எதிர்மறைப் பொருள்கள் பொதிந்துள்ளதைக் காண முடிகிறது. இத்தகு பொருண்மைகளை வெளிக்கொணர்வதில் சூழலின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. பொருள் மயக்கம் என்பதைக் காட்டிலும் பொருண்மை மயக்கம் என்று கூறுவது பொறுத்தமுடைத்தாகிறது.
பொருள்மயக்கத்தை களைவதற்கான கூறுகள் :
* இடம் * காலம் * சூழல்
மேற்காண் உத்திகளை துணையாகக் கொண்டால் பொருள் மயக்கத்தை தவிர்த்து உண்மைப் பொருளை உய்த்துணர முடியும்.[1]
மேற்கோள்கள்
- ↑ தொல்காப்பியமும் நன்னூலும் - ஆசிரியர் ரா.சீனிவாசன் முதல் பதிப்பு 1972