மொழியீறு
சொல்லை word 'மொழி' என்பது பண்டைய வழக்கு. மொழியின் இறுதியில் வரும் எழுத்தை மொழியீறு என இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியம் அவற்றை 24 என வரையறுத்துக் காட்டுகிறது. [1] [2]
உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 11 (ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல வ, ழ, ள), குற்றியஙுகர ஈறு 1, ஆக 24 எழுத்துக்கள் மொழியின் இறுதி எழுத்தாக வரும்.
உயிரெழுத்து ஈறு
உயிரெழுத்து 12-ல் 5 குறிலும் அளபெடையாக ஈறாகும்.
எடுத்துக்காட்டு: ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஓஒ
7 நெடிலும் மொழியாக ஈறாகும்
எடுத்துக்காட்டு: ஆ [3], ஈ, ஊ [4], ஏ [5], ஐ [6], ஓ [7] [ஔ] எழுத்து கௌ [8], வௌ [9] என்னும் இரண்டு சொற்களில் ஈறாகும்.
ஈறாகா உயிர்மெய்
- வல்லின மெய்கள் [க்], [ச்], [ட்], [த்], [ப்], [ற்]
- மெல்லின மெய் [ங்]
மெய்யெழுத்து ஈறு
- வல்லினம் ஆறும் மொழியின் இறுதியில் வருதல் இல்லை. [10]
- வினை - பெயர்
- [ண்] - மண் [11]
- [ம்] - திரும் [12]
- [ன்] - தின் [13]
- [ய்] - வேய் [14]
- [ர்] - பார் [15]
- [ல்] - சொல் [16]
- [ழ்] - வீழ் [17]
- [ள்] - கொள் [18]
- வரையறை
பட்டியல்
தமிழில் மொழியீறு அமைந்திருக்கும் பாங்கு [27] [28]
- [-] குறி மொழியீறாக வராது என்பதைக் குறிக்கும்.
- [*] சொல்லாட்சி எடுத்துக்காட்டு கிடைக்கவில்லை என்பதைக் குறிக்கும்
1
எழுத்து வரிசை | அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | மெய் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உயிர் | ஆஅ | ஆ | ஈஇ | ஈ | ஊஉ | ஊ | ஏஎ | ஏ | ஐ | ஓஒ | ஓ | - | ஃ [29] |
க | வருக | புகா | நோக்கி | புகீ | செகு | புகூ | - | எங்கே | மங்கை | - | கோ | கௌ | - |
ங | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - |
ச | பேச | உசா | விசி | முசீ [30] | உசு [31] | முசூ [32] | - | சே | கச்சை | - | சோ [33] | - | - |
ஞ | அறிஞ | அறிஞா | உரிஞி [34] | உரிஞீ [35] | உரிஞு [36] | உரிஞூ [37] | - | * | உழிஞை | - | * | - | உரிஞ் [38] |
ட | நட | கடா | படி | படீ [39] | படு | படூ | - | * | படை | - | * | - | - |
ண | பண்ண | அண்ணா | அண்ணி | கண்ணீ [40] | கணு | காணூ | - | * | பண்ணை | - | * | - | மண் |
த | அத [41] | புதா [42] | பதி | வதீ | மது | கைதூ [43] | - | தே [44] | தை | - | அந்தோ | - | - |
ந | பொருந | நா | * | நீ | - | - | - | நே [45] | நை [46] | நொ [47] | நோ [48] | - | பொருந் [49] |
2
எழுத்து வரிசை | அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | மெய் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ப | தப்ப | தப்பா | தப்பி | பீ [50] | தப்பு | பூ | - | பே [51] | பை | - | போ | - | - |
ம | அம்ம | அம்மா | அம்மி | மீ [52] | செம்மு [53] | கொண்மூ [54] | - | * | மை | - | மோ [55] | - | திரும் |
ய | செய | செய்யா | * | * | * | செய்யூ [56] | - | * | ஐயை | - | ஐயோ | - | மெய் |
ர | வர | தாரா | கரி | குரீ [57] | கரு | வெரூ [58] | - | * | கரை | - | அரோ | - | பார் |
ல | பல | பலா | வலி | வலீ [59] | வலு [60] | வலூ [61] | - | வல்லே | ஒல்லை [62] | - | * | - | கல் |
வ | தவ [63] | உவா [64] | அருவி | வீ [65] | அறிவு | - | - | - | வை | - | வே [66] | வௌ [67] | தெவ் [68] |
ழ | தொழ | விழா | விழி | வழீ [69] | மழு | எழூ [70] | - | * | கழை | - | * | - | ஊழ் |
ள | உள | களா | கிளி | குளீ [71] | உளு [72] | எள்ளூ [73] | - | * | களை | - | * | - | முள் |
ற | கற | கற்றா [74] | கறி | கறீ [75] | மறு | உறூ [76] | - | * | கற்றை | - | * | - | - |
ன | ஈன | கனா | கனி | நுனீ [77] | முன்னு [78] | முன்னூ [79] | - | என்னே | அன்னை | - | அன்னோ | - | பன் [80] |
அடிக்குறிப்பு
- ↑ தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 104, புணரியல்
- ↑ தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 69-81 மொழிமரபு
- ↑ பசு
- ↑ உணவு
- ↑ அம்பு
- ↑ தலைவன்
- ↑ மதகு அடைக்கும் பலகை
- ↑ வாயால் கௌவு
- ↑ பொருளைக் கையால் பிடுங்கிக்கொள்
- ↑ இக்காலத்தில் பார்க், மார்ச் என இரு எழுத்துக்களில் வரினும் பிற வல்லின எழுத்தில் முடிதல் இல்லை.
- ↑ மண்ணினான் (நீராடினான்)
- ↑ திரும்பினான்
- ↑ தின்றான்
- ↑ வேய்ந்தான்
- ↑ பார்த்தான்
- ↑ சொன்னான்
- ↑ வீழ்ந்தான்
- ↑ கொண்டான்
- ↑ உரியும் தோல்
- ↑ முதுகு
- ↑ பொருத்திக் காட்டு < பொருநர், ஊமையனின் செய்கைமொழி
- ↑ அவை
- ↑ இவை
- ↑ உவை
- ↑ பகைவர்
- ↑ தொல்காப்பியம் இந்த [வ்] ஈற்றை 4 என வரையறை செய்வதால் 'எவை' என வினவும் வினாப் பன்மை 'எவ்' என்னும் ஈறு கொண்டு அக்காலத்து வழங்கவில்லை போலும்.
- ↑ தொல்காப்பியம், எழுத்து அதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, கணைசய்யர் பதிப்பு, 1937 அட்டவணை
- ↑ சில எடுத்துக்காட்டுகள் இக்காலத்தில் புழக்கத்தில் உள்ள சொற்களாக மாற்றப்பட்டுள்ளன
- ↑ ஆய்தம்
- ↑ தயிர் போன்றவற்றைப் பிணைந்து
- ↑ தானியங்களை உளுக்கச் செய்யும் உளு என்னும் வண்டு
- ↑ வாலில்லாக் குரங்கு
- ↑ இயற்கை அரண்
- ↑ தோல் உரிந்து
- ↑ தோல் உரித்து
- ↑ தோலை உரி
- ↑ உரிஞ் என்னும் வினையின் வினையெச்ச வடிவம்
- ↑ உரிஞ்சுதலையும், உரிதலையும் குறிக்கும் வினைப்பகுதி
- ↑ படிந்து
- ↑ நினைந்து
- ↑ அதவு
- ↑ புதர்
- ↑ கைவிடு (திருக்குறள் 1021)
- ↑ இனிமை, தேயம்
- ↑ நேயம்
- ↑ நைந்துபோ
- ↑ துன்புறுத்து
- ↑ நொந்துகொள்
- ↑ பொருந்த நடி, போரிடு
- ↑ மலம்
- ↑ மேகம்
- ↑ 'மீந்தோல்' என்னும் தொடரில் மேல் என்னும் பொருள்
- ↑ உலோகப் பாத்திரம் செய்யும் செம்மான் தொழில்
- ↑ மேகம்
- ↑ முகர்ந்துபார்
- ↑ வினையெச்சம்
- ↑ குருவி
- ↑ வெருவு = அஞ்சி ஒதுங்கு
- ↑ வன்மையாக்கு என்னும் பொருள் தரும் வினையெச்சம்
- ↑ வலிமை
- ↑ (வினையெச்சம்)
- ↑ விரைவில்
- ↑ மிகுதியை உணர்த்தும் உரிச்சொல்
- ↑ நிறைமதி, மறைமதி ஆகிய நாட்களைக் குறிக்கும் பொதுச்சொல்
- ↑ உதிர்ந்த மலர்
- ↑ வேகு
- ↑ வௌவுதல்
- ↑ பகை
- ↑ வழுவி
- ↑ விலா எலும்பு
- ↑ குளித்து
- ↑ தெள்ளுப்பூச்சி
- ↑ எள்ளி என்னும் வினையெச்சம்
- ↑ கன்று போட்ட பசு
- ↑ பல்லால் கறித்தலை உணர்த்தும் வினையால் வரும் வினையெச்சம்
- ↑ துன்புற்று
- ↑ உச்சியில் எறி
- ↑ நினை
- ↑ முந்துறு
- ↑ பஞ்சு, கருக்கறுவாள்