தஞ்சாவூர் அய்யங்குளம் விசுவநாதர் கோயில்
Jump to navigation
Jump to search
அய்யங்குளம் விசுவநாதர் கோயில் | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சை மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | விசுவநாதர் |
தஞ்சாவூர் அய்யங்குளம் விசுவநாதர் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது.[1]
தேவஸ்தான கோயில்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[2]
அமைப்பு
இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. கருவறை கோஷ்டத்தில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி உள்ளனர். திருச்சுற்றில் நவக்கிரக சன்னதி உள்ளது. அருகே பைரவர், சூரியன், சனீஸ்வரர், அனுமார் உள்ளனர்
மூலவர்
இக்கோயிலின் மூலவராக விசுவநாதர் உள்ளார். மூலவர் அறையின் வெளிப்புறத்தில் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு அருகே தனியாக விசாலாட்சியம்மன் சன்னதி உள்ளது.