தஞ்சாவூர் சித்தி விநாயகர் கோயில்
Jump to navigation
Jump to search
தஞ்சாவூர் சித்தி விநாயகர் கோயில் | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சை மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சித்தி விநாயகர் |
தஞ்சாவூர் சித்தி விநாயகர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள விநாயகர் கோயிலாகும். இந்தக் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 3 கிமீ தொலைவில் கருந்தட்டாங்குடியில் அமைந்துள்ளது.
தேவஸ்தான கோயில்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]
அமைப்பு
இக்கோயில் சிறிய ராஜகோபுரம், முன் மண்டபம், கருவறை, விமானம் ஆகிய அமைப்பினைக் கொண்டு விளங்குகிறது. ராஜ கோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால் அருகே மூஞ்சுறும், பலிபீடமும் காணப்படுகின்றன. உள் மண்டபத்தில் சுவரின் இரு புறமும் விநாயகர் ஓவியங்கள் காணப்படுகின்றன.
மூலவர்
கருவறையில் மூலவராக சித்தி விநாயகர் உள்ளார்.