தஞ்சாவூர் கொங்கணேஸ்வரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கொங்கணேஸ்வரர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சை மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:கொங்கணேஸ்வரர்

தஞ்சாவூர் கொங்கணேஸ்வரர் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது.

தேவஸ்தான கோயில்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1]

மூலவர்

தஞ்சாவூர் மகாத்மியம் என்ற ஏட்டுப்பிரதிகளில் பவிஷ்யோத்தர புராணத்தின் ஒரு பகுதியாக கொங்கண முனிவர் வழிபட்ட கொங்கணேஸ்வரரைப் பற்றிய புராணச் செய்திகள் கூறப்பட்டுள்ளன.[2] இக்கோயிலின் மூலவராக கொங்கணேஸ்வரர் உள்ளார்.

அமைப்பு

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது முதலில் கொடி மரம் காணப்படுகிறது. கோயிலின் இடப்புறம் அன்னபூரணி சன்னதி உள்ளது. சன்னதியின் முன்பாக துவாரபாலகிகள் உள்ளனர். பலிபீடம், நந்தியை அடுத்து உள்ளே வலது புறம் விநாயகர் உள்ளார். முன் மண்டபத்தில் கொங்கண சித்தர், திரியம்பகேஸ்வரர், திரிபுரசுந்தரி, ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பைரவர், சனீஸ்வரர், சூரியன் உள்ளனர். திருச்சுற்றின் பின்புறம் கோடி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், விசுவநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், ஏகலிங்கம், கஜலட்சுமி, சதாசிவலிங்கத்தைக் காணலாம். தொடர்ந்து பள்ளியறை உள்ளது. அடுத்து சுந்தரேசர், மீனாட்சி உள்ளனர். மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு உள்ளனர். மூலவர் கருவறையை அடுத்து சிறிய சன்னதியில் ஜுரஹரேஸ்வரர் சன்னதி உள்ளது. சன்னதியின் முன்பாக நந்தி உள்ளது. மூலவர் கருவறையின் இடது புறம் ஞானாம்பிகை சன்னதி உள்ளது.

கட்டுமானம்

இக்கோயில் பல முறை புதுப்பிக்கப்பட்டதால் கட்டுமானத்தில் பிற்காலக் கலை அமைதியைக் காணமுடிகிறது. சோழர் காலக் கல்வெட்டுகளில் ஓரிரு சொற்கள் மட்டுமே திருச்சுற்றுச் சுவர்களில் அரிதாகக் காணப்படுகின்றன.[3] தெற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் முகப்பில் சிறிய கோபுரம் உள்ளது.

மேற்கோள்கள்

  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
  2. அருள்மிகு கொங்கணேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர், திருக்கோயில்கள் வழிகாட்டி, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014, பக்.24
  3. தஞ்சாவூர், குடவாயில் பாலசுப்ரமணியன், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997

வெளி இணைப்புகள்