2008 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பெய்சிங்கில் நடைபெற்ற 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா கலந்துகொண்டது. இப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 56 வீரர்கள் 13 விளையாட்டுகளில் கலந்து கொண்டார்கள். இதில் 16 வீரர்கள் தட கள விளையாட்டுக்களில் பங்கு கொண்டார்கள்.

இதுவே, இதுவரை நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்கள் வென்ற போட்டி ஆகும். 2008 போட்டிகளில் இந்தியா 3 பதக்கங்களைப் பெற்றது. இந்த மூன்று பதக்கங்களும் தனி நபர் பிரிவில் கிடைத்தன.

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு தனி நபர் பிரிவில் தங்கம் கிடைத்தது. அபினவ் பிந்த்ரா 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கத்தை பெற்றார்.[1][2]

பதக்க வெற்றியாளர்கள்

பதக்கம் விளையாட்டு வீரர் விளையாட்டு
3Gold medal icon.svg.png தங்கம் அபினவ் பிந்த்ரா குறி பார்த்துச் சுடுதல்
3Bronze medal icon1.svg.png வெண்கலம் சுசீல் குமார் மற்போர்
3Bronze medal icon1.svg.png வெண்கலம் விஜேந்தர் குமார் குத்துச்சண்டை

சாதனையாளர்கள்

மேற்கோள்கள்

  1. India's Bindra wins gold in the men's 10m air rifle from the Official Website of Beijing Olympics பரணிடப்பட்டது 14 ஆகத்து 2008 at the வந்தவழி இயந்திரம்
  2. "Abhinav Bindra wins 10m air rifle gold". Rediff. 11 August 2008. Archived from the original on 12 August 2008. பார்க்கப்பட்ட நாள் 11 August 2008.