1900 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Olympics India 1900 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிலிருந்து ஒரேஒரு போட்டியாளர் பங்கேற்றார். பிரான்சின் பாரிசில் நடந்த இந்தப் போட்டிகளில் இவ்வாறாக இந்தியா தற்கால ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாகப் பங்கேற்றது. இந்தியா விடுதலை பெறாதிருந்த காலமெனினும் ஒலிம்பிக் வரலாற்றாளர்கள் இந்தியாவின் முடிவுகளைத் தனியாகவே தொகுத்து வந்துள்ளனர். இந்தியாவின் சார்பாக நார்மன் பிரிட்ச்சர்டு பங்கேற்றார்.


2005இல் தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம் 2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் அலுவல்முறையாக தடகளப் போட்டிகளின் புள்ளிவிவரங்களை வெளியிடுகையில் வரலாற்றுப் பகுதியில் பிரிட்ச்சர்டு 1900இல் பெரிய பிரித்தானியாவிற்காக விளையாடியதாக பதிந்துள்ளது. இதனை ஆராய்ந்த ஒலிம்பிக் வரலாற்றாளர்கள் சூன் 1900இல் நடந்த பிரித்தானிய தட கள சங்கம் நடத்திய தகுதிப் போட்டியில் வென்று பெரிய பிரித்தானியா சார்பாக விளையாடியதாக அறிந்தனர்.[1] இருப்பினும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு பிரிட்சர்டு இந்தியா சார்பில் பங்கேற்றதாகவே கருதுகின்றது.

பதக்கம் பெற்றவர்கள்

போட்டி முடிவுகள்

தட களப் போட்டிகள்

பிரிட்ச்சர்டு தட களப் போட்டிகளில், ஐந்து போட்டிகளில் பங்கேற்றார். இவற்றில் இரண்டில் இரண்டாவதாக வந்தார்.

போட்டி இடம் போட்டியாளர் முன்நிலைப் போட்டி அரையிறுதி மீள்வாய்ப்பு இறுதி
60 மீட்டர்கள் நார்மன் பிரிட்சர்டு அறியவில்லை
3வது, முன்நிலை 1
எதுவும் நடைபெறவில்லை முன்னேறவில்லை
100 மீட்டர்கள் நார்மன் பிரிட்சர்டு 11.4 வினாடிகள்
1வது, முன்நிலை 5
அறியவில்லை
3வது, அரையிறுதி 3
அறியவில்லை
2வது
முன்னேறவில்லை
200 மீட்டர்கள் 2வது நார்மன் பிரிட்சர்டு அறியவில்லை
2வது, முன்நிலை 1
எதுவும் நடைபெறவில்லை 22.8 வினாடிகள்
110 மீட்டர் தடையோட்டம் 5வது நார்மன் பிரிட்சர்டு 16.6 seconds
1வது, முன்நிலை 2
எதுவும் நடைபெறவில்லை நேரடியாக
இறுதியாட்டம்
முடிக்கவில்லை
200 மீட்டர் தடையோட்டம் 2வது நார்மன் பிரிட்சர்டு 26.8 வினாடிகள்
1வது, முன்நிலை 2
எதுவும் நடைபெறவில்லை 26.6 விநாடிகள்

மேற்சான்றுகள்

  1. "David Wallechinsky - The Complete Book of the Olympics Aurum Press 2000

வெளி இணைப்புகள்