அருவா வேலு
அருவா வேலு (Aruva Velu) என்பது 1996 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை பி. எஸ். பாரதி கண்ணன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நாசர் மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அருவா வேலு | |
---|---|
இயக்கம் | பாரதி கண்ணன் |
தயாரிப்பு | கே. வி. குணசேகரன் |
கதை | பி. எஸ். பாரதி கண்ணன் |
திரைக்கதை | பி. எஸ். பாரதி கண்ணன் |
இசை | ஆதித்தியன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஏ. சபாபதி |
படத்தொகுப்பு | வி. ராஜகோபால் எஸ். கோவிந்தசாமி |
கலையகம் | குட் வில் மூவிஸ் |
விநியோகம் | குட் வில் மூவிஸ் |
வெளியீடு | சனவரி 15, 1996 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தை கே. வி. குணசேகரன் தயாரித்திருந்தார். ஆதித்தியன் இசை அமைத்திருந்தார். 15 ஜனவரி 1996 இல் இத்திரைப்படம் வெளிவந்தது.[1][2][3]
நடிகர்கள்
- நாசர் - வேலு
- ஊர்வசி - மருதாயி
- ஆனந்த் ராஜ் (நடிகர்) - ஆளவந்தார்
- ராஜேஷ் - முத்துராசா
- ராம் - ஆளவந்தாரின் மகன்
- இலட்சுமணன் - ஆளவந்தாரின் மகன்
- எஸ். என். லட்சுமி - வேலுவின் பாட்டி
- நெல்லை சிவா - காவல் அதிகாரி
- சிங்கமுத்து - குருக்கள்
- போண்டா மணி
- ஜோதி மீனா - பொன்னி
- ஏ. கே. வேலு சாமி
- கிருஷ்ண மூர்த்தி
- சேது விநாயகம் - ஜெயிலர்
- எல். ஐ. சி. நரசிம்மன்
- கருப்பு சுப்பையா
- வெள்ளை சுப்பையா
இசை
அருவா வேலு | |
---|---|
பாடல்கள்
| |
வெளியீடு | 1996 |
ஒலிப்பதிவு | 1995 |
இசைப் பாணி | திரைப்பாடல்கள் |
நீளம் | 25:06 |
இசைத் தயாரிப்பாளர் | ஆதித்தியன் |
இத்திரைப்படத்தில் ஆதித்தியன் இசையமைத்திருந்தார். பஞ்சு அருணாசலம், வைரமுத்து மற்றும் மருதகாசி ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.[4]
மேற்கோள்கள்
- ↑ "Filmography of aruva velu". cinesouth.com. Archived from the original on 2012-10-03. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02.
- ↑ "Aruva Velu". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2013-09-18.
- ↑ "Aruva Velu". gomolo. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2013-09-18.
- ↑ "Download Aruva Velu by ஆதித்தன்". music.ovi.com. Archived from the original on 2013-01-31. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02.