பஞ்சு அருணாசலம்
| பஞ்சு அருணாசலம் | |
|---|---|
| பிறப்பு | 18 சூன் 1941 தமிழ்நாடு, காரைக்குடி, சிறுகூடல்பட்டி[1] |
| இறப்பு | August 9, 2016 (aged 75) சென்னை, இந்தியா |
| பணி | தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர் |
| செயற்பாட்டுக் காலம் | 1965-2016 |
| வாழ்க்கைத் துணை | மீனா |
| பிள்ளைகள் | சுப்பு பஞ்சு, சண்முகம், கீதா, சித்ரா |
பஞ்சு அருணாசலம் (Panchu Arunachalam, 18 சூன் 1941 – 9 ஆகத்து 2016) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரையுலகிற்கு எழுதியுள்ளார். இவரது முதற்பாடல் 'நானும் மனிதன்தான்' என்ற பாடல் 1960 இல் வெளியானது.[2] கவிஞர் கண்ணதாசன் நடத்திய "தென்றல்" என்ற பத்திரிக்கையில் "அருணன்" என்ற பெயரில் இவர் எழுதிய சில கதைகள் பிரசுரமாயின.[3] பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன், கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் அண்ணன் கண்ணப்பன் அவர்களின் மகன்தான் பஞ்சு அருணாசலம். [4] மகன் சுப்ரமணியம் என்கிற சுப்பு பஞ்சு, நடிகர் சுப்பு ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை
ஏ.எல்.எஸ். ஸ்டூடியோவில் செட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து, தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார். செட் போடுவதற்கான பொருளை எடுத்துத் தருவது, பிறகு வேலை முடிந்தவுடன் வாங்கி வைக்கும் வேலை.[3]
பணி
அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். சுப. முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு மேல் பஞ்சு அருணாசலம் திரைக்கதை, வசனம் எழுதினார்.[4]. விரைவில் வெளிவரவிருக்கும் முத்துராமலிங்கம் படத்தின் பாடல்களை எழுதியதே, இவரின் இறுதி பாடலாசிரியர் பணியாகும்[5]. இவர் கதை - வசனம் எழுதி தயாரித்த, ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு, சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருதை இவர் பெற்றுள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களை அதிக அளவில் தயாரித்த பெருமை பஞ்சு அருணாசலத்துக்கு உண்டு[6]
இயற்றிய சில பாடல்கள்
| வரிசை எண் | ஆண்டு | திரைப்படம் | பாடல் | பாடியவர்கள் | இசையமைப்பாளர் | குறிப்புகள் |
|---|---|---|---|---|---|---|
| 1 | 1963 | ஏழை பங்காளன் | தாயாக மாறவா | |||
| 2 | 1963 | நானும் ஒரு பெண் | பூப்போல பூப்போல பிறக்கும் | |||
| 3 | 1965 | கலங்கரை விளக்கம் | பொன்னெழில் பூத்தது | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | எம். எஸ். விஸ்வநாதன் | |
| 4 | 1978 | காற்றினிலே வரும் கீதம் | ஒருவானவில் போலே என் | |||
| 5 | 1979 | ஆறிலிருந்து அறுபது வரை | கண்மணியே காதல் என்பது | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | இளையராஜா | |
| 6 | 1984 | தம்பிக்கு எந்த ஊரு | காதலின் தீபமொன்று ஏற்றினாளே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | இளையராஜா | |
| 7 | 1989 | மாப்பிள்ளை | மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | இளையராஜா | |
| 8 | 1976 | அன்னக்கிளி | திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் | இளையராஜா |
இயக்கிய திரைப்படங்கள்
- இளைய தலைமுறை (1977)
- என்ன தவம் செய்தேன் (1977)
- சொன்னதை செய்வேன் (1977)
- நாடகமே உலகம் (1979)
- மணமகளே வா (1988)
- புதுப்பாட்டு (1990)
- கலிகாலம் (1992)
- தம்பி பொண்டாட்டி (1992)
தயாரித்த திரைப்படங்கள்
- ஆறிலிருந்து அறுபது வரை (1979)
- கல்யாணராமன் (1979)
- எங்கேயோ கேட்ட குரல் (1982)
- ஆனந்த ராகம் (1982)
- ஜப்பானில் கல்யாண ராமன் (1985)
- குரு சிஷ்யன் (1988)
- மைக்கேல் மதன காமராஜன் (1991)
- ராசுக்குட்டி (1992)
- தம்பி பொண்டாட்டி (1992)
- வீரா (1994)
- பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
- ரிஷி (2001)
- சொல்ல மறந்த கதை (2002)
- மாயக் கண்ணாடி (2007)
- காதல் சாம்ராஜ்ஜியம் (வெளிவரவில்லை)
எழுத்தாளர் என்ற வகையில்
- ரிஷி (2001)
- மாயா பஜார் 1995 (1995)
- தொட்டில் குழந்தை (1995)
- சிங்கார வேலன் (1992)
- தம்பி பொண்டாட்டி (1992)
- எங்கிட்ட மோதாதே (1990)
- புதுப்பாட்டு (1990)
- அபூர்வ சகோதரர்கள் (1989)
- ராஜா சின்ன ரோஜா (1989)
- மணமகளே வா (1988)
- குரு சிஷ்யன் (1988)
- என் ஜீவன் பாடுது (1988)
- தர்மத்தின் தலைவன் (1988)
- நீதானா அந்தக்குயில் (1986)
- உயர்ந்த உள்ளம் (1985)
- ஜப்பானில் கல்யாண ராமன்(1985)
- தம்பிக்கு எந்த ஊரு (1984)
- குவா குவா வாத்துகள் (1984)
- வாழ்க்கை (1984)
- தூங்காதே தம்பி தூங்காதே (1983)
- மண்வாசனை (1983)
- பாயும் புலி (1983)
- எங்கேயோ கேட்ட குரல் (1982)
- சகலகலா வல்லவன் (1982)
- மகனே மகனே (1982)
- எல்லாம் இன்பமயம் (1981)
- மீண்டும் கோகிலா (1981)
- கடல் மீன்கள் (1981)
- முரட்டுக் காளை (1980)
- உல்லாசப்பறவைகள் (1980)
- ஆறிலிருந்து அறுபது வரை (1979)
- கல்யாணராமன் (1979)
- கௌரிமான் (1979)
- வெற்றிக்கு ஒருவன் (1979)
- வட்டத்துக்குள் சதுரம் (1978)
- புவனா ஒரு கேள்விக்குறி (1977)
- துணிவே துணை (1976)
- மயங்குகிறாள் ஒரு மாது (1975)
பாடலாசிரியர் பணி
1960களில்
- 1960- தெய்வ பிறவி
- 1963- ஆசை அலைகள்
- 1965- கலங்கரை விளக்கம்
1970களில்
- 1975- மயங்குகிறாள் ஒரு மாது
- 1976- அன்னக்கிளி
- 1977- புவனா ஒரு கேள்விக்குறி
- 1977- காயத்ரி
- 1977- ஆடு புலியாட்டம்
- 1978- முள்ளும் மலரும்
- 1978- வட்டத்துக்குள் சதுரம்
- 1978- பிரியா
- 1979- கௌரிமான்
- 1979- வெற்றிக்கு ஒருவன்
- 1979- ஆறிலிருந்து அறுபதுவரை
- 1979- கவிக்குயில்
- 1979- பூந்தளிர்
1980களில்
- 1980- குரு
- 1980- உல்லாசப் பறவைகள்
- 1980- முரட்டுக்காளை
- 1980- நெஞ்சத்தைக் கிள்ளாதே
- 1980- அன்புக்கு நான் அடிமை
- 1981- அலைகள் ஓய்வதில்லை
- 1981- கர்ஜனை
- 1981- கழுகு
- 1981- சங்கர்லால்
- 1981- எல்லாம் இன்பமயம்
- 1981- கடல்மீன்கள்
- 1981- மீண்டும் கோகிலா
- 1982- கோபுரங்கள் சாய்வதில்லை
- 1982- ராணி தேனி
- 1982- எங்கேயோ கேட்ட குரல்
- 1983- கோழி கூவுது
- 1983- ஆனந்தக்கும்மி
- 1983- அடுத்த வாரிசு
- 1983- மண்வாசனை
- 1984- அம்பிகை நேரில் வந்தாள்
- 1984- தம்பிக்கு எந்த ஊரு
- 1984- வைதேகி காத்திருந்தாள்
- 1984- வாழ்க்கை
- 1985- புதிய தீர்ப்பு
- 1985- மனக்கணக்கு
- 1986- நீதானா அந்தக்குயில்
- 1987- உள்ளம் கவர்ந்த கள்வன்
- 1988- மணமகளே வா
- 1988- தர்மத்தின் தலைவன்
- 1989- மாப்பிள்ளை
1990களில்
- 1990- புதுப்பாட்டு
- 1991- தர்மதுரை
- 1993- சின்னக்கண்ணம்மா
- 1994- வியட்நாம் காலணி
- 1995- மாயா பஜார் 1995
2000த்தில்
- 2001- ரிஷி
கவியரசர் கண்ணதாசனுக்கு பாடல் உதவி
- புன்னகை
- தேனும் பாலும்
- ஆண்டவன் கட்டளை
- சங்கே முழங்கு
- பெரிய இடத்துப் பெண்
- தாயைக்காத்த தனயன்
- பழனி
- சபதம்
- மணி ஓசை
- காவியத் தலைவி
மறைவு
பஞ்சு அருணாசலம் தனது 75 வது அகவையில் சென்னையில் 2016 ஆகத்து 9 அன்று காலமானார்.[7]
மேற்கோள்கள்
- ↑ http://cinema.maalaimalar.com/2013/11/18224845/panchu-arunachalam-introduce-i.html
- ↑ "திரை உலகுக்கு இளையராஜாவை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம்". Archived from the original on 2014-01-23. Retrieved 2015-06-29.
- ↑ 3.0 3.1 பஞ்சு அருணாசலம் (20 ஏப்ரல் 2016). திரைத்தொண்டர். ஆனந்தவிகடன். pp. 76–78.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link) - ↑ 4.0 4.1 "சினிமா எடுத்துப் பார் 70: பஞ்சு அருணாசலம்- எல்லாமுமாக வாழ்ந்தவர்!". தமிழ் இந்து. Retrieved ஆகத்து 17, 2016.
- ↑ "பிரபல தமிழ்த் திரைப்பட கதாசிரியர் பஞ்சு அருணாசலம் காலமானார்". பிபிசி தமிழ். Retrieved ஆகத்து 17, 2016.
- ↑ "பிரபல கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்!". விகடன். Retrieved ஆகத்து 17, 2016.
- ↑ "Panchu Arunachalam passes away". The Hindu. Retrieved 9 ஆகத்து 2016.