அகர் நகரம்
அகர் | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 23°42′59″N 76°00′59″E / 23.71639°N 76.01639°E | |
| நாடு | |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| மாவட்டம் | அகர் மால்வா மாவட்டம் |
| ஏற்றம் | 505 m (1,657 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 37,950 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | இந்தி, மாளவ மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 465441 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
| வாகனப் பதிவு | MP-70 |
| அருகமைந்த நகரங்காள் | உஜ்ஜைன், இந்தூர், மண்டோசோர் |
| எழுத்தறிவு | 65%% |
| மக்களவை தொகுதி | தீவாசு மக்களவைத் தொகுதி |
| இணையதளம் | https://agarmalwa.nic.in/ |
அகர், (Agar), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அகர் மால்வா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான போபாலிர்ந்து 184 கிலோ மீட்டர் தொலைவிலும்; உஜ்ஜைன் நகரத்திலிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் உஜ்ஜைன்-கோட்டா நகரங்களுக்கு இடையே செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 27ல் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 வார்டுகளும், 7,349 குடியிருப்புகளும் கொண்ட அகர் நகரத்தின் மக்கள் தொகை 37,917 ஆகும். அதில் 19,607 ஆண்கள் மற்றும் 18,310 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.90 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 934 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 80.29 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 13.81 % மற்றும் 1.30 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 68.69%, இசுலாமியர் 25.87%, சமணர்கள் 5.08%, பௌத்தர்கள் மற்றும் பிற சமயத்தினர் 0.40% வீதம் உள்ளனர்.[1]இந்நகரத்தில் மாளவ மொழி, வட்டார மொழியாகப் பேசப்படுகிறது.
போக்குவரத்து
மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 552G அகர் நகரம் வழியாகச் செல்கிறது.[2]