அசிசைட்டு
Jump to navigation
Jump to search
| அசீசைட்டு Asisite | |
|---|---|
நமீபியாவின் கோம்பாட் சுரங்க அசிசைட்டு | |
| பொதுவானாவை | |
| வகை | ஆலைடு |
| வேதி வாய்பாடு | Pb7SiO4O4Cl2 |
| இனங்காணல் | |
| படிக அமைப்பு | நாற்கோணம் இருநாற்கோண இரட்டைக் கூர் நுனி வகை. |
| மோவின் அளவுகோல் வலிமை | 3 1⁄2 |
அசிசைட்டு (Asisite) என்பது Pb7SiO8Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மஞ்சள் நிறத்தில் நாற்கோணவமைப்பு படிகமாக இது காணப்படுகிறது. நமீபியா நாட்டின் 14 மண்டலங்களில் ஒன்றான ஓட்யோசோஞ்யுபா மண்டலத்திலுள்ள குரூட்போன்டீன் மாவட்டத்தில் இருக்கும் கோம்பாட் சுரங்கத்தில் 1988 ஆம் ஆண்டு இக்கனிமம் கண்டறியப்பட்டது. அசிசு என்ற பண்ணைக்குள் இச்சுரங்கம் காணப்பட்டதால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.