அசீநாப்தைலீன்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| ஐயூபிஏசி பெயர்
அசீநாப்தைலீன்
| |||
| முறையான ஐயூபிஏசி பெயர்
மூவளைய[6.3.1.04,12]தோதெக்கா-1(12),2,4,6,8,10-எக்சேன் | |||
| வேறு பெயர்கள்
வளையபெண்டா[டி]நாப்தலீன், அசீநாப்தலீன்
| |||
| இனங்காட்டிகள் | |||
| 208-96-8 | |||
| ChEBI | CHEBI:33081 | ||
| ChemSpider | 8807 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
| பப்கெம் | 9161 | ||
| |||
| UNII | 1Z25C36811 | ||
| பண்புகள் | |||
| C12H8 | |||
| வாய்ப்பாட்டு எடை | 152.20 g·mol−1 | ||
| தோற்றம் | மஞ்சள் நிறப் படிகங்கள் | ||
| அடர்த்தி | 0.8987 கி செ.மீ−3 | ||
| உருகுநிலை | 91.8 °C (197.2 °F; 364.9 K) | ||
| கொதிநிலை | 280 °C (536 °F; 553 K) | ||
| கரையாது | |||
| எத்தனால்-இல் கரைதிறன் | நன்கு கரையும் | ||
| டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் | நன்கு கரையும் | ||
| பென்சீன்-இல் கரைதிறன் | நன்கு கரையும் | ||
| குளோரோஃபார்ம்-இல் கரைதிறன் | கரையும் | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
அசீநாப்தைலீன் (Acenaphthylene) என்பது C12H8 என்ற வேதிவாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமம் ஆகும். அசீநாப்தைலீனின் மூலக்கூற்று அமைப்பு 1 மற்றும் 8 நிலைகளில் C2H2 அலகு இணைக்கப்பட்ட நாப்தலீனின் அமைப்பை ஒத்திருக்கிறது. மஞ்சள் நிறத்தில் திண்மமாக இருக்கும் இச்சேர்மம் மற்ற பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்களைப் போல ஒளிர் தன்மையற்று காணப்படுகிறது.
தோற்றம்
நிலக்கரித் தாரில் 2% அளவுக்கு அசீநாப்தைலீன் காணப்படுகிறது. அசீநாப்தீனை ஐதரசன் நீக்கம் செய்யும் வினையின் மூலம் தொழிற்துறையில் அசீநாப்தைலீன் தயாரிக்கப்படுகிறது[1]. அண்டத்தில் காணப்படும் 20% அளவுக்கு மேலான கார்பன், பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்களில் இருந்தே கிடைக்கிறது[2].
வினைகள்
அசீநாப்தைலீனனை ஐதரசன் நீக்க வினைக்கு உட்படுத்துவதால் அதிக நிலைப்புத்தன்மை கொண்ட சேர்மமான அசீநாப்தீன் உருவாகிறது. சில கரிமவுலோக சேர்மங்களுக்கு இச்சேர்மம் ஒரு ஈதல் தொகுதியாகச் செயல்படுகிறது[3]
மேற்கோள்கள்
- ↑ Karl Griesbaum, Arno Behr, Dieter Biedenkapp, Heinz-Werner Voges, Dorothea Garbe, Christian Paetz, Gerd Collin, Dieter Mayer, Hartmut Höke “Hydrocarbons” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002 Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a13_227
- ↑ Hoover, Rachel (February 21, 2014). "Need to Track Organic Nano-Particles Across the Universe? NASA's Got an App for That". நாசா. Retrieved February 22, 2014.
- ↑ Yukihiro Motoyama; Chikara Itonaga; Toshiki Ishida; Mikihiro Takasaki; Hideo Nagashima (1925). "Catalytic Reduction of Amides to Amines with Hydrosilanes Using a Triruthenium Cluster as the Catalyst". Organic Syntheses 82: 188. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV11P001.; Collective Volume, vol. 11, p. 1