அடைகலாபுரம்
அடைகலாபுரம் | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 628217[1] |
| தொலைபேசி குறியீடு | 91-4630 |
அடைகலாபுரம் (Adaikalapuram) என்பது தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இது நங்கைமொழி ஊராட்சியால் நிருவகிக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் தசரா திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும்.
அமைவிடம்
இந்த ஊரானது கடல் மட்டத்திலிருந்து 21 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இது மாவட்ட தலைநகரான தூத்துக்குடியிலிருந்து 49 கிலோமீட்டர் தொலைவிலும், உடன்குடியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 665 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] இது சாத்தன்குளம் பேரூராட்சிக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.
அரசியல்
அடைகலாபுரம், திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்ட கிராமமாகும்.
போக்குவரத்து
அடைகலாபுரத்திற்கு மிக அருகில் உள்ள தொடருந்து நிலையம் திருநெல்வேலி (47 கி.மீ) ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ News, India TV. "Adaikalapuram Pin Code". www.indiatvnews.com. Retrieved 2025-02-10.
{{cite web}}:|last=has generic name (help); Text "Postal Code (Zip Code) of Adaikalapuram, Tuticorin, Tamil Nadu, India" ignored (help) - ↑ "Adaikalapuram Village , Udangudi Block , Tuticorin District". www.onefivenine.com. Retrieved 2025-02-10.