அந்தி இளங்கீரனார்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அந்தி இளங்கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பெயரில் ஒரே ஒரு பாடல் மட்டும் உள்ளது.
பாடல்
அகம் 71 பாலை
புலவர் பெயரின் விளக்கம்
இவரது இயற்பெயர் இளங்கீரன். இவர் கதிரவன் மறையும் அந்தி வேளையை 'பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை' என்று சிறப்பித்துள்ளமையால் இவருக்கு 'அந்தி' அன்னும் அடைமொழி வழங்கப்பட்டுள்ளது.
பாடல் தரும் செய்தி
தலைவன் பிரிந்திருந்தபோது தலைவி தன் வருத்தத்தைத் தோழிக்குப் புலப்படுத்துகிறாள்.
உவமை நலன்கள்
- செல்வம் குறைந்தோர் பயனின்மையில் நிறைந்தோரைத் தேடும் 'நயனில் மாக்கள்'
- நயனில் மாக்களைப் போல வண்டினம் சுனைப்பூவை விட்டுவிட்டுச் சினைப்பூவை நாடல்
- வானம் வெந்து ஆறு ஓடுவதுபோல அந்தி பூத்தல்
- 'நிழல் கால் மண்டிலம்' என்னும் கண்ணாடியில் என் உள்ளம் ஊதும் பெருமூச்சுக் காற்று படிந்து மங்குவது போல என் மதுகை(உள்ளத்தின் உரம்) மாயந்துகொண்டிருக்கிறது போலும்
- என் உயிர் மரத்திலிருந்து புள் பறப்பது போல் பறந்துவிடும்