அனீசு ஜங்
| அனீசு ஜங் | |
|---|---|
| பிறப்பு | 15 திசம்பர் 1944 ராவுர்கேலா, ஒடிசா; இந்தியா |
| தேசியம் | இந்திய மக்கள் |
| படித்த கல்வி நிறுவனங்கள் | மிச்சிகன் பல்கலைக்கழகம் |
| பணி | எழுத்தாளர், பத்திரிக்கையாளர் |
| அறியப்படுவது | அன்வெயிலிங் இந்தியா (1987) |
அனீசு ஜங் (Anees Jung)(பிறப்பு: திசம்பர் 15, 1944) என்பவர் ஓர் இந்திய எழுத்தாளரும், பத்திரிகையாளரும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும்[1] செய்தித்தாள்களுக்கான கட்டுரையாளரும் ஆவார். இவரது மிகவும் பிரபலமான படைப்பான அன்வெயிலிங் இந்தியா (1987) இந்தியாவில் உள்ள பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பாகும். குறிப்பாகப் பர்தாவுக்குப் பின்னால் உள்ள முஸ்லிம் பெண்களின் சித்தரிப்புக்காகக் குறிப்பிடப்பட்டது.[2]
இளமையும் கல்வியும்
அனீசு ஜங் ஒடிசா மாநிலம் ராவுர்கேலாவில்[3] பிறந்து ஐதராபாத்தில் வளர்ந்தார்.[3] ஒரு பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை நவாப் கோசு யார் ஜங், ஓர் அறிஞரும் கவிஞரும் ஆவார். மேலும் ஐதராபாத் மாநிலத்தின் கடைசி நிசாமின் (இளவரசர்) முசாகிப்பாக (ஆலோசகராக) பணியாற்றினார்.[4] இவரது தாயாரும் சகோதரரும் உருது கவிஞர்கள்.[5] ஐதராபாத்தில் உள்ள உசுமானியா பல்கலைக்கழகத்தில் பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு, மிச்சிகன் பல்கலைக்கழக ஏன் ஆர்பரில் உயர் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். இங்கு இவர் சமூகவியல் மற்றும் அமெரிக்கப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[6]
தொழில்
அனீசு ஜங் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியீடான யூத் டைம்சில் எழுத்துப் பணியைத் தொடங்கிய இவர், இங்கு ஒரு பத்திரிகையாளராகவும் ஆசிரியராகவும் (1973 முதல் 1980 வரை) பணியாற்றினார். பின்னர் இவர் தி கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர், இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.[7] அனீசு ஜங் தில்லியில் வசிக்கிறார்.[4]
புத்தகங்கள்
1987-ஆம் ஆண்டு ஜங் "அன்வெயிலிங் இந்தியா" என்ற நூலை வெளியிட்டார். இது பெண்களுடனான நேர்காணல்களை மையமாகக் கொண்ட ஒரு பயணக் குறிப்பேடு வெளியிடப்பட்டது. இதைப் பற்றி இவர் தொடர்ந்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். பெண்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறார். இவற்றில் நைட் ஆஃப் தி நியூ மூன்: என்கவுண்டர்ஸ் வித் முஸ்லிம் வுமன் இன் இந்தியா (1993), செவன் சிசுடர்சு (1994) ஆகியவை அடங்கும். பிரேக்கிங் தி சைலன்ஸ் (1997) உலகம் முழுவதிலுமிருந்து பெண்களின் வாழ்க்கை குறித்த உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டது.
மற்றவர்கள் குடிகார தந்தையர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள் அல்லது சீக்கிரமே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள் அல்லது பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம்[8] செய்யப்படுகிறார்கள். இருப்பினும் சிலர் நல்லெண்ணம் கொண்ட அரசு சாரா நிறுவனங்களால் அமைக்கப்பட்ட பள்ளிகளில் அடைக்கலம் தேடுகிறார்கள். இந்தப் புத்தகத்தின் ஒரு பகுதி நடுவண் இடைநிலைக் கல்விப் பள்ளிகளில் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு 12ஆம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தின் ஒரு பகுதியாகும்.[3] ஜங் தனது துடிப்பான மற்றும் விளக்கங்களுக்குப் பெயர் பெற்றவர்.[8]
நூல் பட்டியல்
- ஒரு இடம் ஒரு நபராக மாறும்போது (When a Place Becomes a Pe ISBN 0-7069-0526-1rson). விகாசு வெளியீடு, 1977.
- முக்கிய குறிப்புகள்: உரைநடையில் கவிதைகள் (Flashpoints: Poems in Prose). தரங் பேப்பர்பேக்ஸ், 1981.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7069-1440-6.
- அன்வெயிலிங் இந்தியா (Unveiling India), பெங்குயின் புக்ஸ், 1987.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-010344-9
- இந்தியாவின் பாடல் (The Song of India). இமயமலை புத்தகங்கள், 1990.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7002-055-781-7002-055-7 அறிமுகம்
- அமாவாசை இரவு: இந்தியாவில் முஸ்லிம் பெண்களுடனான சந்திப்புகள் (Night of the New Moon: Encounters with Muslim Women in India). பெங்குயின் புக்ஸ், 1993.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-023405-5
- ஏழு சகோதரிகள்: தெற்காசியப் பெண்களிடையே (Seven Sisters: Among the Women of South Asia). பெங்குயின் புத்தகம், 1994.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-024579-00-14-024579-0
- மௌனத்தை உடைத்தல்: உலகம் முழுவதிலுமிருந்து பெண்களின் குரல்கள் (Breaking the Silence: Voices of Women from Around the World). பெங்குயின் புத்தகம், 1997.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-3-103374-392-3-103374-3
- ஜெரிகோவிலிருந்து ஆலிவ்கள்: குளிர்கால தோட்டங்களில் அமைதி (Olives from Jericho: Peace in Winter Gardens). யுனெஸ்கோ, 1999.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-3-103642-4
- பியாண்ட் தி கோர்ட்யார்டு: அன்வெயிலிங் இந்தியா படத்தின் தொடர்ச்சி (Beyond the Courtyard: a Sequel to Unveiling India). வைக்கிங், 2003
- இழந்த வசந்தம்: திருடப்பட்ட குழந்தைப் பருவத்தின் கதைகள் (Lost Spring: Stories of Stolen Childhood). பெங்குயின் புத்தகம், 2005.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-400016-4
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Indian women lack freedom: Anees Jung". The Hindu. 27 January 2004 இம் மூலத்தில் இருந்து 15 September 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070915133519/http://www.hinduonnet.com/2004/01/27/stories/2004012710670300.htm.
- ↑ Parbina Rashid (27 April 2004). "Highlighting problems of women, youth". The Tribune. http://www.tribuneindia.com/2004/20040427/cth2.htm#7.
- ↑ 3.0 3.1 3.2 Anees Jung (2007). "Lost Spring". Flamingo - Textbook in English for Class XII (PDF) (in ஆங்கிலம்). New Delhi: NCERT. p. 13. ISBN 978-81-7450-650-4. Retrieved 6 November 2019.
Anees Jung (1964) was born in Rourkela and spent her childhood and adolescence in Hyderabad.
- ↑ 4.0 4.1 Anees Jung பரணிடப்பட்டது 27 செப்டெம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம் Penguin India.
- ↑ Anees Jung பரணிடப்பட்டது 22 சூன் 2010 at the வந்தவழி இயந்திரம் Oxford Bookstore.
- ↑ Seven Sisters: among the women of South Asia. Penguin Books, 1994, p. i.
- ↑ Anees Jung பரணிடப்பட்டது 27 சூலை 2010 at the வந்தவழி இயந்திரம் writersfestival.org
- ↑ 8.0 8.1 Mishty Varma, "Jung exposes national shame", Hindustan Times, 1 January 2001.