அனுசா சையத்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அனுசா சையத்
பிறப்புபாக்கித்தான்
தேசியம்கனடா
பணிவிளக்கப்படம் வரைபவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தட்ஸ் நாட் மய் நேம்!

அனுஷா சையத் (Anoosha Syed) ஓர் பாக்கித்தானிய-கனடிய ஓவியரும் மற்றும் எழுத்தாளரும் ஆவார். கரமோ பிரௌனின் சித்த்திரப் புத்தகமான ஐ ஆம் பெர்பெக்ட்லி டிசைன் என்பதில் பணியாற்றினார்.[1] வஹீத் முராத் பிறந்தநாளில் கூகுளின் கேலிச்சித்திரத்திற்காக பாக்கித்தானின் நடிகரும் பின்னணிப் பாடகருமான வாகித் முராத்தின் ஓவியத்தை வரைந்தார்..

இளமை வாழ்க்கை

அனுசா சையத், தனது தந்தையின் வேலை காரணமாக தனது குழந்தை பருவத்தில் அடிக்கடி இடம் பெயர்ந்து சென்றார். சில நேரங்களில் சவுதி அரேபியா மற்றும் துபாயில் வசித்து வந்தார். மேலும் பாக்கித்தான் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.[2]

அனுசா,[[[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] உள்ள ஒரு கல்லூரியில் பயின்றார். அங்கு செருலியம் எகோல் டி கலைப் பள்ளியில் ஓவியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[3][4][5]

தொழில் வாழ்க்கை

அனுசா சையத் இயங்குபடம் துறையில் சுமார் ஒரு தசாப்த காலமாக பணியாற்றினார்.[6] 2016 ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு ஊடக வெளியீடான டிஸ்னி பிரின்சஸ் என்பதின் நவீன கால பதிப்புகளில் பண்யாற்றும்போது இவரது ஓவியங்கள் பலரது கவனத்தை ஈர்த்தன. 2017 ஆம் ஆண்டில், ஆரி பாட்டர் கதையின் எர்மாயினி கிறேஞ்செரின் ஓவியம் பல கலவையான விமர்சனத்தை எதிகொண்டது.[7][8]

2019 ஆம் ஆண்டில், கரமோ பிரௌனின் சித்திரப் புத்தகமான ஐ ஆம் பெர்பெக்ட்லி டிசைன் என்பதில் தனது மகனுடன் இணைந்து படங்களை வரைந்தார்.[5] அந்த ஆண்டு அக்டோபரில், பாக்கித்தான் நடிகர் வகீத் முராத்தின் 81 வது பிறந்தநாளை முன்னிட்டு கூகிள் டூடுலுக்கு படங்கள் வரைந்தார்.[9]

2022 ஆம் ஆண்டில், அனுசா சையத் ஒரு எழுத்தாளராக தட்ஸ் நாட் மை நேம் என்ற தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார். மிர்ஹா என்ற இளம் பெண் தனது பெயரை எவ்வாறு உச்சரிப்பது என்பதை தனது வகுப்பு தோழர்களுக்குக் கற்பிக்கும் இந்த புத்தகம், பள்ளியில் தனது பெயரை தவறாக உச்சரிப்பதில் அனுசா சையத்தின் சொந்த அனுபவங்களிலிருந்து உத்வேகம் பெற்றது.[6][10] 2023 ஆம் ஆண்டில், இந்த புத்தகம் புளூ ஸ்ப்ரூஸ் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.[11] எழுத்தாளராக இவரது இரண்டாவது புத்தகம், லாஸ்ட் ஸ்டிக், மார்ச் 2024 இல் வெளியிடப்பட்டது. இது 2025 புளூ ஸ்ப்ரூஸ் விருதுக்கான இறுதிப் போட்டிக்குச் சென்றது.[12]

பிரிஜெட் பாராகர், மேரி பிளேர், இசுடீவி லூயிஸ், புரோவென்சன்ஸ் மற்றும் மிரோஸ்லாவ் சசெக் ஆகிய கலைஞர்களை சையத் மேற்கோள் காட்டியுள்ளார்.[6]

சொந்த வாழ்க்கை

2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, அனுசா சையத் தனது கணவர் மற்றும் அவரது பூனையுடன் கனடாவின் தொராண்டோவில் வசிக்கிறார்.[6]

மேற்கோள்கள்

  1. Lengel, Kerry. "'Queer Eye' star's new book says kids are 'perfectly designed.' Meet him Friday in Tempe". The Arizona Republic. https://www.azcentral.com/story/entertainment/arts/2019/11/05/karamo-brown-i-am-perfectly-designed-book-signing-changing-hands-tempe/4127120002/. 
  2. "Q&A With Anoosha Syed, That's Not My Name!". We Need Diverse Books (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-07-12. Retrieved 2024-04-02.
  3. "Q&A With Anoosha Syed, That's Not My Name!". We Need Diverse Books (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-07-12. Retrieved 2024-04-02."Q&A With Anoosha Syed, That's Not My Name!". We Need Diverse Books. 2022-07-12. Retrieved 2024-04-02.
  4. Pan, ChinLin (2017-12-29). "Illustrator Anoosha Syed talks art". Shuffle Online (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-04-02.
  5. 5.0 5.1 S, Arun (2022-11-09). "In Conversation With Illustrator Anoosha Syed". Brown Girl Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-04-02.
  6. 6.0 6.1 6.2 6.3 "Q&A With Anoosha Syed, That's Not My Name!". We Need Diverse Books (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-07-12. Retrieved 2024-04-02."Q&A With Anoosha Syed, That's Not My Name!". We Need Diverse Books. 2022-07-12. Retrieved 2024-04-02.
  7. "These Illustrations of Disney Princesses As Millenials Represent Every Member of Your Squad". Seventeen (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-02-16. Retrieved 2024-04-02.
  8. "Illustrator trolled for black Hermione Granger drawing". Digital Spy (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-09-20. Retrieved 2024-04-02.
  9. "Waheed Murad's 81st Birthday Doodle". Google Doodles (in ஆங்கிலம்). Retrieved 2024-04-02.
  10. Koranne, Shailee (2022-10-18). "This book is for anyone who knows what it's like to have a 'difficult' name". https://www.cbc.ca/arts/this-book-is-for-anyone-who-knows-what-it-s-like-to-have-a-difficult-name-1.6619414. 
  11. "Forest of Reading reveals chosen books for 2023 program — students across Canada will choose the winners". 2022-10-18. https://www.cbc.ca/books/forest-of-reading-reveals-chosen-books-for-2023-program-students-across-canada-will-choose-the-winners-1.6618925. 
  12. Team, Education Library. "Research Guides: Forest of Reading®, K to 6 Programs: Blue Spruce Nominees, 2025". guides.library.queensu.ca (in ஆங்கிலம்). Retrieved 2024-11-08.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அனுசா_சையத்&oldid=245589" இலிருந்து மீள்விக்கப்பட்டது