அனுலோமா
அனுலோமா (Anuloma) என்பது மனுதரும சாத்திரத்தின்படி பிறப்பால் உயர்ந்த பிரிவைச் சேர்ந்தவராகக் கருதப்படும் ஒரு ஆணுக்கும் பிறப்பால் தாழ்ந்த பிரிவைச் சேர்ந்தவராகக் கருதப்படும் ஒரு பெண்ணுக்கும் இடையில் நிகழும் திருமண உறவைக் குறிக்கும் ஒரு சமசுகிருதச் சொல்லாகும்.[1] பிறப்பால் ஒரே படிநிலையைச் சேராத சாதியினரும் வர்க்கத்தினரும் திருமண உறவுகளில் கூடியதே மனிதர்களிடையே வெவ்வேறு சாதிகள் தோன்றியதற்குக் காரணம் என்று மனு கூறுகிறார்.[2] மனுவின் கூற்றுப்படி, ஒரே சாதிக்குள், அதாவது ஒரே படிநிலையில் இருக்கும் இருவருக்கிடையேயான திருமணம் சிறப்பானது.[1] அனுலோமா திருமணங்கள் "இயல்பான" கூடல்களாக கருதப்படுகின்றன.[2] இந்து சமய நூல்கள் அனுலோமா திருமணங்களைப் பரிந்துரைக்கவில்லை. எனினும், அவற்றைக் காலம்காலமாக பொறுத்துக்கொண்டும் ஏற்றுக்கொண்டும் வந்தனர்.[3]
மறுபுறம், பிரதிலோமா திருமணங்கள், அதாவது பிறப்பால் உயர்ந்த பிரிவைச் சேர்ந்தவராகக் கருதப்படும் ஒரு பெண் அவரை விட பிறப்பால் தாழ்ந்த பிரிவைச் சேர்ந்தவராகக் கருதப்படும் ஒரு ஆணுடன் இணைவது கண்டிக்கப்பட்டுள்ளன. இத்தகைய திருமணங்களை மனு கடுமையாகக் கண்டிக்கிறார். இந்த வகைத் திருமனங்களை "இயல்புக்கு மாறானவை" என்று மனு கண்டிக்கிறார். மேலும், இவ்வாறான திருமணங்களுக்குப் பிறகு தொடர்புடைய மக்கள் எதிர்கொள்ளும் இழிவுக்கு அவர்களே பொறுப்பு என்றும் சாடுகிறார். இருப்பினும், மனுவுக்குப் பின்வந்தவர்கள் இத்தகைய திருமணங்களை ஏற்றுக்கொள்ள தலைப்பட்டனர்.[4]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Subodh Kapoor. The Indian Encyclopaedia: Mahi-Mewat. Genesis Publishing Pvt Ltd, 2002. p. 4642.
- ↑ 2.0 2.1 Joseph Kitagawa. The Religious Traditions of Asia: Religion, History, and Culture. Routledge, 2013. p. 16.
- ↑ Irfan Habib, K. N. Panikkar, T. J. Byres, Utsa Patnaik. The Making of History: Essays Presented to Irfan Habib. Anthem Press, 2002. p. 183.
{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Rajendra Kumar Sharma. Fundamentals of Sociology. Atlantic Publishers & Dist, 1996. p. 253.
வெளியிணைப்புகள்
- சோழர், பாண்டியர் ஆட்சியில் சாதி கலப்பால் உருவான மக்கள் எப்படி நடத்தப்பட்டார்கள்?, பிபிசி தமிழ், 9 சூலை 2024