அன்பின்நகரம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அன்பின்நகரம்

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
628702[1]
படிமம்:Anbinnagaran church.jpg
அன்பின்நகரம் கிறித்துவ தேவாலயம்

அன்பின்நகரம் (Anbinnagaram) என்பது தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிறிய கிராமப் பகுதியாகும். போதகர். சி. டி. இ. ரேனியஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ஊரில் நான்கு தெருக்கள் மட்டுமே இருக்கின்றன. இது முதலூர் ஊராட்சியால் நிருவகிக்கப்படுகிறது.[2]

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தூத்துக்குடிக்குத் தெற்கே 55 கிலோமீட்டர் தொலைவிலும், சாத்தான்குளத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 671 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[3]

மக்கள்

இந்த ஊரில் வசிப்பவர்கள் அனைவரும் கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள். விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் கருமேனி ஆற்று ஓடை உள்ளது. இந்த ஓடையில் மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஓடுகிறது.

ஆலய விழாக்கள்

இவ்வூரின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை பெரிய வாரத்திலும், கோபுர பிரதிஷ்டை பண்டிகை மே மாத முதல் வாரத்திலும் நடைபெறும்.

மேற்கோள்கள்

  1. "ANBINNAGARAM Pin Code - 628702, Sathankulam All Post Office Areas PIN Codes, Search TUTICORIN Post Office Address". news.abplive.com. https://news.abplive.com/pincode/tamil-nadu/tuticorin/anbinnagaram-pincode-628702.html. 
  2. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "Anbinnagaram Village , Sattankulam Block , Tuticorin District". www.onefivenine.com. Retrieved 2025-02-27.
"https://tamilar.wiki/w/index.php?title=அன்பின்நகரம்&oldid=247532" இலிருந்து மீள்விக்கப்பட்டது