அமானா வங்கி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அமானா வங்கி
Amana Bank
வகைபொது
நிறுவுகை2012
தலைமையகம்கொழும்பு, இலங்கை இலங்கை
அமைவிட எண்ணிக்கைகொழும்பு, காலி, நீர்கொழும்பு, புத்தளம், மாவனெல்ல, அனுராதபுரம், கதுருவெல, சம்மாந்துறை, கிண்ணியா, ஏறாவூர், நிந்தவூர், கல்முனை, காத்தான்குடி, மாத்தளை, கடுகஸ்தோட்டை, இரத்தினபுரி, கண்டி, பதுளை, குருணாகல், அக்கரைப்பற்று
சேவை வழங்கும் பகுதிஇலங்கை
தொழில்துறைநிதி
உற்பத்திகள்வங்கி மற்றும் நிதி தொடர்பான சேவைகள்
இணையத்தளம்உத்தியோகபூர்வ வலைத்தளம்

அமானா வங்கி (Amana Bank)இலங்கையில் காணப்படும் பிரதானமான முன்னணி வங்கிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[1] இவ்வங்கியானது பெரும்பாலும் இஸ்லாமிய அடிப்படை விழுமியப்பண்புகளையும் இஸ்லாமிய நெறிமுறைகளையும் பண்பாடுகளையும் நடைமுறையில் கடைப்பிடிக்கின்றது. அமானா வங்கி இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றினாலும் இவ்வங்கியானது இன மத மொழி வேறுபாடுகள் பாகுபாடுகள் அன்றி இலங்கையில் வாழும் பலதரப்பட்ட மக்களினுடைய அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் திடசங்கட்பம் பூண்டுள்ளது.[2] முழு அளவிலான முழு நேர அடிப்படையில் இசுலாமியச் சட்ட முறைமையினை அமானா வங்கி பின்பற்றுகின்றது. முழு அளவிலான முழு நேர அடிப்படையில் வங்கி செயல்பாடுகளினை இஸ்லாமிய வங்கி கோட்பாடுகளுக்கும் தத்துவங்களுக்கும் அமைவாக நடைமுறையில் அமுல்படுத்தும் உரிமம் பெற்ற ஒரே வர்த்தக வங்கியாக அமானா வங்கி இலங்கையில் திகழ்கின்றது.[3][4] அமானா வங்கி வட்டி அடிப்படையிலான வங்கி நடவடிக்கைகளை அங்கீகரிக்காத வங்கியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அமானா வங்கியானது இஸ்லாமிய விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு தங்களுடைய வங்கி செயல்பாடுகளை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற முறையில் நிறைவேற்றுகின்றது. இதனால் தான் அமானா வங்கி வட்டி கொள்கையினை பின்பற்றுவதில்லை அதற்கு மாறாக இலாபம் அடிப்படையிலான வங்கி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றது. கடனடிப்படையில் வங்கி சேவைகள் பெரும்பாலும் இயங்குகின்ற காலகட்டத்தில் அமானா வங்கியானது நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கடனை பணமாக தருவதில்லை. அதற்கு பதிலாக வாடிக்கையாளருக்கு குறிப்பிட்ட வியாபாரியிடம் சென்று குறிப்பிட்ட கடனில் வாங்க முனையும் நோக்கில் வாடிக்கையாளர் ஒருவர் இருப்பாராயின் அவர் அந்த வியாபாரியிடம் பற்றுச்சீட்டினை பெற்றுக்கொண்டு அதனை அமானா வங்கி கிளையினுடாக குறிப்பிட்ட சேவையினை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கின்றது. அமானா வங்கி குறிப்பிட்ட தொகையினை அக்குறிப்பிட்ட வியாபாரிக்கு செலுத்தி தம்மை நாடி வந்த வாடிக்கையாளருக்கு தேவையான பொருளினை அல்லது சேவையினை பெற்றுக்கொடுக்கிறது. அப்போது அதனை அமானா வங்கி வியாபாரிக்கு கொடுத்த தொகையினை விட சற்று அதிகமான விலையில் அப்பொருளினை வாடிக்கையாளருக்கு விற்பனை அடிப்படையில் இலாபம் ஈட்டும் முறையில் அளிக்கின்றது. இவ்வாறு தான் அமானா வங்கி கடனடிப்படையில் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது.[5]

அமானா வங்கி இலங்கையில் ஏறத்தாழ முப்பத்தி நான்கு இடங்களில் கிளைகளை கொண்டுள்ளது. பெரும்பாலும் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் இடங்களில் அமானா வங்கியின் கிளைகள் அமையப்பெற்றுள்ளன. அமானா வங்கியானது கொழும்பு, காலி, நீர்கொழும்பு, புத்தளம், மாவனெல்ல, அனுராதபுரம், கதுருவெல, சம்மாந்துறை, கிண்ணியா, ஏறாவூர், நிந்தவூர், கல்முனை, காத்தான்குடி, மாத்தளை, கடுகஸ்தோட்டை, இரத்தினபுரி, கண்டி, பதுளை, குருணாகல், அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

  1. "அமானா வங்கி - இலங்கையில் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி". www.amanabank.lk. Retrieved 2025-03-01.
  2. "சிறந்த செயற்பாடுகளுக்கு மத்தியில் பங்குகள் ஒன்றிணைப்புக்கு அமானா வங்கி பங்குதாரர்கள் வரவேற்பு". tamil.adaderana.lk. Retrieved 2025-03-01.
  3. "உாிமம்பெற்ற வா்த்தக வங்கிகள் | Central Bank of Sri Lanka". www.cbsl.gov.lk. Retrieved 2025-03-01.
  4. "அமானா வங்கி மற்றும் Prime குரூப் இணைந்து கனவு இல்லத்தை நனவாக்க முன்வந்துள்ளன!". Virakesari.lk (in ஆங்கிலம்). Retrieved 2025-03-01.
  5. "Amãna Bank - Islamic Banking and Finance in Sri Lanka". www.amanabank.lk (in ஆங்கிலம்). Retrieved 2025-03-01.
"https://tamilar.wiki/w/index.php?title=அமானா_வங்கி&oldid=249269" இலிருந்து மீள்விக்கப்பட்டது