அய்தல் கோசுலா
| அய்தல் கோசுலா | |
|---|---|
| பிறப்பு | அய்தல் கோசுலா 03-திசம்பர்-1993 சண்டிகர், இந்தியா |
| கல்வி | ஆங்கிலத்தில் கௌரவ பட்டப்படிப்பு (பஞ்சாப் பல்கலைக்கழகம்) சொகுசு மேலாண்மை (இலண்டன் மாடல் பள்ளி) |
| படித்த கல்வி நிறுவனங்கள் | செயிண்ட் சிடீபன்சு பள்ளி, சண்டிகர்]] எம்.சி.எம்.டி.ஏ.வி மகளிர் கல்லூரி |
| அழகுப் போட்டி வாகையாளர் | |
| பட்டம் | மிசு இந்தியா உலகம் 2015 பலாசு தேசிய அழகுப் போட்டி 2015 |
| செயல் ஆண்டுகள் | 2015 - தற்போது |
| முக்கிய போட்டி(கள்) | கிளாமானந்த் சூப்பர் வடிவழகி இந்தியா 2015 (வெற்றியாளர்) (மிசு இந்தியா உலகம் 2015) (மிசு உலகம்) (மிசு எக்கோ-சுற்றுலா) (மிசு புரொடக்டிவ் பியூட்டி) பலாசு தேசிய அழகுப் போட்டி 2015 (வெற்றியாளர்) பலாசு தேசிய அழகுப் போட்டி சண்டிகர் (முதல் ரன்னர் அப்) பெமினா மிசு இந்தியா டெல்லி 2015 (இறுதிப் போட்டியாளர்) மிசு உலகம் 2015 (இடமளிக்கப்படவில்லை) |
அய்தல் கோசுலா (Aaital Khosla) இந்திய நாட்டினைச் சார்ந்த வடிவழகி மற்றும் அழகு ராணி ஆவார். கிளமானந்த் சூப்பர் வடிவழகி இந்திய பட்டம் பெற்றார். ஆசுதிரியா நாட்டின் வியன்னாவில் நடைபெற்ற மிசு உலகம் 2015 ஆம் ஆண்டு போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில்
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
அய்தல் சண்டிகர் மாநிலத்தில் வணிகம் மற்றும் அரசியல் பின்புலம் கொண்ட ஓர் குடும்பத்தில் பிறந்தார். சண்டிகர் மாநிலத்தில் உள்ள செயின்ட் சுடீபன் பள்ளியில் பயின்றார். எம். சி. எம். டி. ஏ. வி மகளிர் கல்லூரியில் மேலும் படிப்பதற்காகச் சென்றார்.
தொழில் மற்றும் அழகு போட்டிகள்
2015 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில், குர்கானில் நடைபெற்ற கயாத் ரீசென்சி இடத்தில் நடைபெற்ற பெமினா மிசு இந்தியா தில்லி போட்டியில் பங்கேற்றார். இவர் முதல் 6 இடங்களில் இடம்பிடித்து "மிசு பேசன் ஐகான்" துணை விருதை வென்றார்.[1] அதே ஆண்டு பாலாசு தேசிய அழகு போட்டி சண்டிகர் மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டு போட்டியில் பங்கேற்றார். மேலும் 1 வது ரன்னர் அப் என்று அறிவிக்கப்பட்டார். பின்னர், பாலாசு தேசிய அழகு விழா 2015 ஆம் ஆண்டில் நுழைந்தார். இறுதியில் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார்.
இந்தியா மிசு உலகம் போட்டிக்கான தேசிய அதிகாரபூர்வமான கிளமானந்த் சூப்பர் வடிவழகி இந்திய நாட்டின் இரண்டாவது பதிப்பில் போட்டியிட்டார். மேலும் குர்கானில் உள்ள கோர்ட்யார்டு மேரியட் விடுதியில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று நடைபெற்ற இறுதி நிகழ்வின் முடிவில் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார். முக்கிய பட்டத்தை வென்றதைத் தவிர, போட்டியில் மிசு
இணையம், மிசு எக்கோ-சுற்றுலா மற்றும் மிசு புரொடக்டிவ் பியூட்டி ஆகிய மூன்று சிறப்பு விருதுகளையும் வென்றார்
ஆசுதிரியா நாட்டின் வியன்னாவில் நடைபெற்ற மார்க்சு காலேவில் நடைபெற்ற மிசு உலகம் 2015 ஆம் ஆண்டு போட்டியில் அய்தல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2] [3] [4]
சர்ச்சை
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மிஸ் எர்த் இந்தியா நிறுவனம் அய்தலை பிரதிநிதித்துவப்படுத்தி வெளியிட்ட ஒரு காணொளி பெரிய சர்ச்சையில் சிக்கியது இமயமலையை சித்தரிக்கும் முயற்சியில் எவரெசுட்டு சிகரத்தை வீடியோ குழு காட்சிப்படுத்தியது. காணொளி விரைவாக கவனத்தை ஈர்த்தது. 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டு ஒரு புதிய காணொளி பதிவேற்றப்பட்டது. காணொளியை உருவாக்கிய வரைகலை குழு தான் இந்த தவறைச் செய்ததாகவும், அந்த தவறு புரிந்தவுடன் அந்த வீடியோ அகற்றப்பட்டதாகவும் மிஸ் எர்த் இந்தியா நிறுவனத்தின் தேசிய இயக்குநர் தெளிவுபடுத்தினார். இதற்காக பின்னர் தனது முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கேட்டார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "Miss India Delhi 2015 - Miss India Delhi 2015 - Contestants - Miss India - Beauty Pageants - Indiatimes". 2015-11-07. Archived from the original on 7 November 2015. Retrieved 2024-08-16.
- ↑ Locsin, Joel. "Pinay bags Miss Earth 2014 title". GMA Network. http://www.gmanetwork.com/news/story/390377/lifestyle/peopleandevents/pinay-bags-miss-earth-2014-title.
- ↑ Жигарева, Гертруда. "Россиянка получила титул "Мисс огонь" на конкурсе "Мисс Земля" (in Russian)". Moskovskij Komsomolets. http://www.mk.ru/social/2014/11/30/rossiyanka-poluchila-titul-miss-ogon-na-konkurse-miss-zemlya.html.
- ↑ "Miss Earth 2014 Crown Goes To Miss Philippines". Travelers Today. 29 November 2014. http://www.travelerstoday.com/articles/15107/20141129/miss-earth-2014-crown-goes-philippines.htm.
- ↑ Bajracharya, Nasana (29 November 2015). "Miss Earth India apologises to Nepal for 'hurting sentiments'". The Himalayan Times. Retrieved 10 March 2024.