அர. வேலு
Jump to navigation
Jump to search
ரங்கசாமி வேலு | |
|---|---|
| முன்னாள் இரயில்வே அமைச்சர் | |
| பதவியில் 2004-2009 | |
| பின்னவர் | கே. எச். முனியப்பா |
| தொகுதி | அரக்கோணம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 26 சூலை 1940 திருவண்ணாமலை, தமிழ்நாடு |
| அரசியல் கட்சி | பாமக |
| துணைவர் | மல்லிகா |
| பிள்ளைகள் | 2 |
| வாழிடம்(s) | சென்னை, தமிழ்நாடு |
| மூலம்: [1] | |
ரங்கசாமி வேலு (பிறப்பு: சூலை 26, 1940) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கட்சியின் உறுப்பினர் ஆவார். 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலிருந்து 14 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இரயில்வே அமைச்சராகப் பணியாற்றியவர்.
இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். கூடுதல் பதிவாளர், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்தார்; தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டார். இவர் மாவட்ட ஆட்சியராகவும், நகராட்சி நிர்வாக கூட்டு ஆணையராகவும், வருவாய் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்தார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "Fourteenth Lok Sabha Members Bioprofile". Parliament of India. Archived from the original on 29 செப்டம்பர் 2018. Retrieved 30 மார்ச் 2016.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archive-date=(help) - ↑ "Celebrity Photo Gallery, Celebrity Wallpapers, Celebrity Videos, Bio, News, Songs, Movies". www.in.com/. Archived from the original on 2016-04-08. Retrieved 2016-03-30.
{{cite web}}: Unknown parameter|=ignored (help)