அ. கந்தன்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அ. கந்தன் (பி. 1937) மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரும் ஆவார்.
இலக்கியத்துறை
1960ஆம் ஆண்டு முதல் சிறுகதைகள், நாடகங்கள், குறுநாவல் போன்ற தமிழ்ப் படைப்பிலக்கியங்களையும், கட்டுரைகளையும் படைத்துவரும் இவரின் ஆக்கங்கள் மலேசிய தேசிய தினசரிகளிலும், வார இதழ்களிலும் மற்றும் மலேசியா சிற்றிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
புனைப்பெயர்கள்
இவர் 'தமிழ் மகன்', 'வள்ளுவதாசன்' ஆகிய புனைப்பெயர்களால் தமிழ் இலக்கியம் படைத்து வருகின்றார்.
எழுதியுள்ள நூல்கள்
- அன்புள்ள தம்பி தமிழரசுக்கு
- மலேசியாவில் தமிழ்ப் பள்ளியும் தமிழ்க் கல்வியும்
- ஒரு தொண்டனின் பயணம் தொடர்கிறது
- அன்புக்கு நான் அடிமை
- குறளமுதம்
- ஒரு சிறந்த தலைவர்
- முத்தமிழும் முக்கனியும்
- உன்னால் முடியும் தம்பி
- இளந்தமிழா விழித்திடு
- மாணவன் மணிவண்ணன்
விருதுகளும், பரிசுகளும்
- தமிழ்த் தொண்டன் (1974)
- மக்கள் எழுத்தாளர் (1997)
- மலேசிய அரசாங்கத்தின் பிபிஎன் விருது (1980)
மேலும், பல மலேசியா நிறுவனங்களினால் விருதுகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
உசாத்துணை
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் அ. கந்தன் பக்கம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்