ஆப்கானித்தான் அமீரகம்
ஆப்கானித்தான் அமீரகம் د افغانستان امارت ட ஆஃப்கானிஸ்தான் அமாரத் | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1823–1926 | |||||||||||
சின்னம்
| |||||||||||
| 1893 துராண்டு கோடு உடன்பாட்டிற்கு முந்தைய ஆப்கானித்தான் 1893 துராண்டு கோடு உடன்பாட்டிற்கு முந்தைய ஆப்கானித்தான் | |||||||||||
| நிலை | பிரித்தானிய கையாளுகை (1839-1842) பிரித்தானியர் பாதுகாப்பில் (1879–1919) | ||||||||||
| தலைநகரம் | காபூல் | ||||||||||
| பேசப்படும் மொழிகள் | பஷ்தூ, பாரசீகம் | ||||||||||
| சமயம் | சுன்னி இசுலாம் | ||||||||||
| அரசாங்கம் | இசுலாமிய சமயச்சார்பான முழுமையான முடியாட்சி | ||||||||||
| அமீர் | |||||||||||
• 1823–1829 (முதல்) | தோஸ்த் மொகமது கான் | ||||||||||
• 1919–1926 (கடைசி) | அமனுல்லாகான் | ||||||||||
| சட்டமன்றம் | லோயா ஜிர்கா | ||||||||||
| வரலாற்று சகாப்தம் | 19வது நூற்றாண்டு | ||||||||||
• தொடக்கம் | 1823 | ||||||||||
• முடிவு | 1926 | ||||||||||
| பரப்பு | |||||||||||
| 1893 | 652,225 km2 (251,825 sq mi) | ||||||||||
| நாணயம் | ஆப்கன் ரூபாய் | ||||||||||
| ஐ.எசு.ஓ 3166 குறியீடு | AF | ||||||||||
| |||||||||||
ஆப்கானித்தான் அமீரகம் (Emirate of Afghanistan, பஷ்தூ: د افغانستان امارت ) நடு ஆசியாவிற்கும் தெற்கு ஆசியாவிற்கும் இடையிலிருந்த அமீரகம் ஆகும்; இது தற்போது இசுலாமிய ஆப்கானித்தானியக் குடியரசாக இருக்கின்றது. துராணிப் பேரரசிலிருந்து இது பிரிந்து தோஸ்த் மொகமது கானால் உருவாக்கப்பட்டது; அவர் காபூலில் பராக்சாய் அரசமரபை நிறுவினார். இந்த அமீரகத்தின் வரலாற்றில், நடு ஆசியாவில் முதன்மை வகிக்க உருசியப் பேரரசுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே நடந்த ' நிழல் போட்டி' பெருமளவில் இடம் பிடித்திருந்தது. இக்காலத்தில் ஆப்கானித்தானத்தில் ஐரோப்பியர் தாக்கம் மிகுந்திருந்தது; தெற்கு ஆசியாவில் ஐரோப்பியரின் குடியேற்ற விரிவாக்கம் நிகழ்ந்தது. ஆப்கானித்தான் அமீரகம் சீக்கியப் பேரரசுடனான போரைத் தொடர்ந்தது; இதனால் பிரித்தானியர்-தலைமையிலான இந்தியப் படைகள் ஆப்கானித்தானைக் கைப்பற்றி 1842இல் ஆப்கானித்தானை முற்றிலும் அழித்தன. இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போரின்போது, பிரித்தானியர்கள் மீண்டும் ஆப்கானித்தானை முறியடித்தனர்; இச்சமயம் பிரித்தானியர் ஆப்கானித்தானின் வெளிநாட்டு விவகாரங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்தனர். மூன்றாம் ஆங்கில-ஆப்கானித்தானியப் போரில் வென்ற அமனுல்லாகான் 1919இல் கண்ட உடன்படிக்கையின்படி முழுமையான அதிகாரத்தை மீட்டுக் கொண்டது.[1]