ஆம்லா ரூயா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஆம்லா ரூயா
Amla Ruia
படிமம்:Amla Ashok Ruia.jpg
தேசியம்இந்தியன்
பணிஇந்திய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்
அறியப்படுவதுசமூக சேவகி

ஆம்லா ரூயா (Amla Ruia) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகி ஆவார்.

சொந்த வாழ்க்கை

ஆம்லா ரூயா உத்திர பிரதேசத்தில் பிறந்தார்.[1] தற்போது அவர் மும்பை மகாராஷ்டிராவில் உள்ள மலபார் ஹில் எனுமிடத்தில் வசித்து வருகிறார். இவருடைய கணவர் ராஜஸ்தானை சேர்ந்தவர்.[2] இவர் கவிஞரும், பாடலாசிரியரும், கலைஞரும், ஆன்மீக ஆசிரியருமாவார்.[3]

சேவை

இவர் நீர் ஆதாரங்களை ஏற்படுத்தியதன் மூலம் அறியப்படுகிறார்.[4].தன்னுடைய மாநிலத்தில் நிலவிய தண்ணீர் பஞ்சத்தை மாற்றியமைக்க வேண்டுமென்று ஆகர் தொண்டு நிறுவனத்தை நிறுவினார்.இதன் மூலம் பல கிராமங்களில் நீர் தேக்கங்களையும் அணைகளையும் ஏற்படுத்தியுள்ளனர்.

ஆகர் தொண்டு நிறுவனம்

அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் நீர், தாவரங்கள் மற்றும் மண் போன்ற இயற்கை ஆதாரங்களின் பாதுகாப்பினை ஏற்படுத்துதல் ஆகும்.நீர் என்பது மக்களின் சமூக அங்கீகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இங்குள்ள மக்கள் உணர்த்தியுள்ளனர்.[3].

சாதனைகள்

தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 216-க்கும் மேலான நீர்த்தேக்கங்களை ஏற்படுத்தி உள்ளனர்.[2].இதனால் 117 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயனடைகின்றனர்.[3].

விருதுகள்

2011 ஆம் ஆண்டில், இவருக்கு சமூக சேவை மற்றும் சமூக மேம்பாட்டின் வகைக்கான லக்ஷ்மிபத் சிங்கானியா - ஐஐஎம், லக்னோ தேசிய தலைமை விருது வழங்கப்பட்டது.[4][5].இங்கு உள்ள மக்கள் இவரைதண்ணீரின் அன்னை என்று அழைக்கின்றனர்.[2].[3].

சான்றுகள்

  1. "About the Trust". Aakar Charitable Trust. Archived from the original on 2016-03-04. Retrieved 2015-09-18.
  2. 2.0 2.1 2.2 http://www.vikatan.com/avalvikatan/2016-may-03/inspiring-stories/118268-amla-ruia-rajasthans-mother-of-water.html
  3. 3.0 3.1 3.2 3.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2017-05-27.
  4. 4.0 4.1 "Leadership Awards". Hindustan times இம் மூலத்தில் இருந்து 18 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150118202726/http://www.hindustantimes.com/business-news/premji-nayar-win-biz-awards/article1-966634.aspx. 
  5. "LAKSHMIPAT SINGHANIA - IIM, LUCKNOW NATIONAL LEADERSHIP AWARDS - 2013". www.lpsiimlawards.in. Archived from the original on 2019-01-09. Retrieved 2015-09-18.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆம்லா_ரூயா&oldid=264720" இலிருந்து மீள்விக்கப்பட்டது