ஆர்சனோலைட்டு
| ஆர்சனோலைட்டு Arsenolite | |
|---|---|
அமெரிக்காவின் நெவேதா மாநிலம் நையி மாகாணத்தின் மன்காட்டன் மாவட்டத்தில் கிடைத்த ஆர்சனோலைட்டு (அளவு: 6.0 x 4.3 x 2.9 செ.மீ) | |
| பொதுவானாவை | |
| வகை | ஆக்சைடு கனிமம் |
| வேதி வாய்பாடு | As4O6 |
| இனங்காணல் | |
| மோலார் நிறை | 197.841 கி/மோல் |
| நிறம் | வெண்மை, வெளிர் நீலம், இளஞ் சிவப்பு, மாசு கலந்ததெனில் மஞ்சள் |
| படிக இயல்பு | பொதுவாக சிறிய எண்முகம்; பொதி அல்லது ஓடு; கொத்து, |
| படிக அமைப்பு | கனசதுரம் |
| பிளப்பு | {111} இல் |
| முறிவு | சங்குரு |
| மோவின் அளவுகோல் வலிமை | 1.5 |
| மிளிர்வு | பட்டுப் பளபளப்பு; மங்கலானது |
| கீற்றுவண்ணம் | வெண்மை /வெளிர் வெண்மை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
| ஒப்படர்த்தி | 3.87 |
| ஒளியியல் பண்புகள் | சம உரு; திசையற்றது |
| ஒளிவிலகல் எண் | n = 1.755 |
| பிற சிறப்பியல்புகள் | துவர்ப்பு, இனிப்புச் சுவை; நச்சு |
| மேற்கோள்கள் | [1][2][3] |
ஆர்சனோலைட்டு (Arsenolite) என்பது As4O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஆர்சனிக் சல்பைடுகள் ஆக்சிசனேற்றம் அடைவதால் உருவாகும் விளைபொருளாக ஆர்சனோலைட்டு உருவாகிறது. பொதுவாக வெண்மை நிறத்தில் சிறிய எண்முகப் படிகங்களாகக் காணப்படுகிறது. ஆனால் மாசுகளாகக் காணப்படும் ரியல்கர் அல்லது ஒர்பிமெண்ட்டு போன்ற சல்பைடு கனிமங்களால் இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறச் சாயல் தோன்றுகிறது. ஆர்சனிக் டிரை ஆக்சைடின் ஒற்றைச்சரிவச்சு வகைக் கனிமமான ஈருருவ கிளாடிடைட்டு, ரியல்கர் (As4S4), ஓர்பிமெண்டு (As2S3), எரித்ரைட்டு Co3(AsO4)2•8H2O ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து கூட்டாக ஆர்சனோலைட்டு இயற்கையில் காணப்படுகிறது [1].
அதிக நச்சுத்தன்மை மிக்க கனிமங்கள் என்ற வகைப்பாட்டுக் குழுவில் ஆர்சனோலைட்டு கனிமமும் இடம்பெறுகிறது [3].
பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் ஆர்சனோலைட்டு கனிமத்தை Aso[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
தோற்றம்
முதன்முதலில் 1854 ஆம் ஆண்டு செருமனி நாட்டின் லோயர் சேக்சோனி மாநிலத்தின் செயின்ட் ஆண்டிரியசுபெர்க் மாவட்ட ஆர்சு மலையில் கண்டறியப்பட்டது [3].
ஆர்சனைடைக் கொண்டுள்ள சல்பைடு கனிமங்கள் இருக்கும் நீர்வெப்பப் பகுதிகளில் ஆக்சிசனேற்ற விளைபொருளாக ஆரசனோலைட்டு தோன்றுகிறது. சுரங்கம் அல்லது நிலக்கரி அடுக்கு தீப்பிடிப்பு பகுதிகளிலும் இது தோன்றுகிறது [1].
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 Handbook of Mineralogy
- ↑ Webmineral
- ↑ 3.0 3.1 3.2 Mindat
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.